புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் பெங்களூர்- சென்னை அணிகளுக்கு இடையேயான போட்டி 18-ந்தேதி இரவு 8 மணிக்கு தொடங்குவதாக இருந்தது. மழை குறிக்கிட்டதால் ஆட்டம் தொடங்குவது தாமதமானது. மழை நின்ற பிறகு போட்டி 11 மணிக்கு தொடங்கியது. நேரம் இல்லாததால்
போட்டி 8 ஓவராக குறைக்கப்பட்டது.

டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் டோனி பீல்டிங் தேர்வு செய்தார். பெங்களூர் அணியின் கெய்ல்- விராட் கோலி தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். முதல் ஓவரை அஸ்வின் வீசினார். அந்த ஓவரில் 6 ரன் எடுக்கப்பட்டது. 2-வது ஓவரை மோரிஸ் வீசினார். இந்த ஓவரில் கெய்ல் ஒரு சிக்சர் விளாச 11 ரன்கள் எடுக்கப்பட்டது.

ஹோல்டர் வீசிய 5-வது ஓவரில் கெய்ல் தொடர்ச்சியாக 3 சிக்சர் விளாசினார். பிராவோ வீசிய அடுத்த ஓவரில் கெய்ல் அவுட் ஆனார். கோலி எதிர்முனையில் அதிரடியாக விளையாடினார். அவர் சிறப்பாக விளையாடி 29 பந்தில் 4 சிக்சர், 6 பவுண்டரியுடன் அவுட் ஆகாமல் 56 ரன் எடுத்தார். இவரது ஆட்டத்தால் பெங்களூர் அணி 8 ஓவருக்கு 2 விக்கெட் இழந்து 106 ரன் குவித்தது.

107 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் சென்னை அணியின் ஹசி- விஜய் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். பெங்களூர் அணியின் ராம்பவுல் முதல் ஓவரை வீசினார். அந்த ஓவரில் 8 ரன் எடுக்கப்பட்டது. 2-வது ஓவரை ஜாகீர்கான் வீசினார். அந்த ஓவரின் 3-வது பந்தில் ஹசி விக்கெட் கீப்பர் ராகுலிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அடுத்த பந்தில் ரெய்னா ரன்ஏதும் எடுக்காமல் முதல் பந்திலேயே வினய் குமாரிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.

அதன்பின் விஜயுடன், பிராவோ ஜோடி சேர்ந்தார். பெங்களூர் அணியின் சிறப்பான பந்து வீச்சால் சென்னை அணி ரன் அடிக்க முடியாமல் திணறியது. பிராவோ 11 ரன் எடுத்த நிலையில் வினய்குமார் பந்தில் திவாரியிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அதன்பின் வந்த டோனி அதிரடியாக விளையாடி 10 பந்தில் 24 ரன் எடுத்து அவுட் ஆனார்.

தொடக்க வீரர் விஜய் 32 ரன்னில் அவுட் ஆக சென்னை அணியால் 8 ஓவரில் 6 விக்கெட்டுகளை இழந்து 82 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் பெங்களூர் அணி 24 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

சென்னை , பெங்களூர் அணிகள் தனது அனைத்து லீக் போட்டியிலும் விளையாடி விட்டது. சென்னை அணி 16 போட்டியில் 11 வெற்றி, 5 தோல்வியுடன் முதலிடம் பெற்றுள்ளது. பெங்களூர் அணி 16 போட்டிகளில் 9 போட்டிகளில் வெற்றி பெற்று 4-வது இடத்தில் உள்ளது.

நாளை நடைபெறும் கொல்கத்தா- சன்ரைசர்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியில் சன்ரைசைர்ஸ் வெற்றி பெற்றால் பெங்களூர் அணி 5-வது இடத்தை பெற்று பிளே-ஆப் வாய்ப்பை இழக்கும். அதற்கு மாறாக கொல்கத்தா அணி வெற்றி பெற்றால் பெங்களூர் அணி பிளே-ஆப் சுற்றுக்கு தகுதிப்பெறும்.
 
Top