புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

சுவிட்சர்லாந்திலுள்ள பெர்ன் மாநிலத்தில் பியன் நகர் அருகே உள்ள ஒரு விபச்சார விடுதியின் உரிமையாளர் ஒருவர் பெண்களைக் கடத்தி வந்து
விபச்சாரத்தில் ஈடுபட வற்புறுத்தியதால் சீலொண்ட் - ஜுரா நீதிமன்றம் இவர்களுக்கு எட்டரை ஆண்டு சிறைத்தண்டனை விதித்துள்ளது.
துருக்கியைச் சேர்ந்த 38 வயதுடைய ஒருவரும், அவருக்குத் துணையாய் இருந்த மூவரும் நேற்று நீதிமன்றத்தில் ஆஜராயினர். அரசு சட்டதரனி, இவருக்கு பத்தாண்டு சிறைத்தண்டனை வழங்க வேண்டும் என்று நீதிபதியிடம் வேண்டினார்.

குற்றம் சாட்டப்பட்ட நிடாவு, ரோமேனியா நாட்டில் இருந்து பெண்களை அதிகமாக வரவழைத்து விபச்சாரத்தில் ஈடுபடுத்தினார். இதுவரை இவர் சுமார் 45 பேரை கடத்தி வந்துள்ளார். இவர்களுக்கு வீட்டுவேலை, மதுபானக் கூடத்தில் பரிசாரகர் வேலை மற்றும் விபச்சாரம் போன்றவற்றில் ஈடுபடுத்தினார்.

ஒரு நாளைக்கு 11 மணிநேரமும் வேலை வாங்கியுள்ளார். வாரத்திற்கு ஆறேழு நாட்கள் இப்பெண்கள் வேலை பார்த்தனர்.

நீதிமன்றத்தில் தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுக்கும் இவர் தனது விபச்சார விடுதியில் இப்பெண்கள் விருப்பத்துடன் வேலை செய்வதாகவும், தான் அவர்களை வற்புறுத்தவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

விபச்சாரத்துக்கு சட்ட அந்தஸ்து கொடுத்துள்ள சுவிஸ் அரசு பெண்களின் வயதை 16ல் இருந்து 18 ஆக உயர்த்தத் திட்டமிட்டுள்ளது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top