புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

வடக்கு ஜேர்மனியில் கனமழை காரணமாக வெள்ள பெருக்கு வரும் அபாயம் இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இந்த வார இறுதி நாட்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக ஆய்வாளர்
ஜோஹனா ஏங்கர் தெரிவித்துள்ளார். இந்த வாரத்தொடக்கத்தில் பெய்த பெருமழையால் ஹில்டாஷீம் பகுதி படுமோசமான பாதிப்புக்கு ஆளாகியுள்ளது.

இன்னும் அங்கு மீட்புப்பணிகள் முடியாத நிலையில் தொடர்ந்து மழை கொட்டுவதால் அங்கு வெள்ளம் வரும் என்று எதிர்பார்த்து ஆயத்தப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

ஹார்ஸ் மலைப்பகுதியிலும், நாட்டின் தென்கிழக்கு மூலையிலும் 1 நாளைக்கு 50 முதல் 60 லிற்றர் வரை மழை பெய்யும் அபாயநிலை ஏற்பட்டுள்ளது.

மேலும் நாட்டின் மற்ற பகுதியில் குளிர்ச்சி நிலவும், தரை ஈரமாக இருக்கும். வடக்கிலும், கிழக்கிலும் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்வதால் வெப்பம் 20 டிகிரி செல்சியஸ் அளவில் தான் இருக்கும்.

இரவின் வெப்பநிலை நகர்ப்பகுதிகளில் 14 டிகிரி செல்சியஸ் ஆகக் குறைந்துவிடும். கிராமப்புறங்களில் 5 டிகிரி செல்சியஸ் ஆக இருக்கும்.

ஞாயிறன்று தெற்கிலும், கிழக்கிலும் மழை பொழியும். மேலும் மேற்கிலும், வடமேற்கிலும் வெயில் அடிக்கும் நிலை உருவானால் வெள்ளநீர் வடிந்து சகஜ நிலை திரும்பும் என்று எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top