புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


மேற்கு ஜேர்மனியின் மருந்து நிறுவனங்கள், கிழக்கு ஜேர்மனியைச் சேர்ந்த சுமார் 50,000 நோயாளிகளுக்கு தனது புதிய மருந்துகளைக் கொடுத்துப் பரிசோதனை செய்துள்ளதாக ஊடகத்
தகவல் தெரிவித்துள்ளன.
கடந்த 1989ம் ஆண்டு பெர்லின் சுவர் தகர்க்கப்படும் வரை ஐம்பதுக்கு மேற்பட்ட மருத்துவமனைகளில் சுமார் 600 புதிய வகை மருந்துகளை அப்பாவி பொதுமக்களுக்குப் பரிசோதனை முறையில் வழங்கப்பட்டன. இதில் சிலர் உயிரிழந்தனர்.

ஜேர்மனியோடு அமெரிக்காவும், சுவிட்சர்லாந்தும் இணைந்து இந்த சதி வேலையில் ஈடுபட்டுள்ளன. இதற்கு ஒத்துழைக்கும் படி ஏழை நாடான கிழக்கு ஜேர்மனிக்கு இன்றைய மதிப்பில் 4 லட்சம் யூரோவை சுகாதார நல நிதி என்ற பெயரில் இந்நாடு வழங்கியுள்ளது.

ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும் Trental என்ற மருந்தை கிழக்கு பெர்லினில் நோயாளிகள் கொடுத்து சோதித்த பொழுது இருவர் இறந்துவிட்டனர். இந்த மருந்தை அப்போதைய ஹோக்ஸ்ட் நிறுவனம் தயாரித்திருந்து. தற்பொழுது அந்நிறுவனம் சனோஃபியாவுடன் இணைந்துவிட்டது.

மேக்டிபர்க் நகரில் நுரையீரல் சிகிச்சைக்காக வந்திருந்த நோயாளிகளுக்கு இரத்த அழுத்த மருந்து ஒன்று தரப்பட்ட போது இருவர் இறந்து போயினர். இந்த மருந்து அப்போதைய சாண்டோஸ் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது.

தற்பொழுது நோவார்ட்டிசுடன் இந்நிறுவனம் இணைந்துவிட்டது. பிறந்த சிசுக்களுக்கும் சோதனை முயற்சியாக இது போன்ற மருந்துகள் தரப்பட்டதாகத் தெரிகின்றது.

ஆனால் மருந்து தயாரிப்பாள் சங்கம் மருந்து பரிசோதனையில் எவ்வித முறைகேடும் நடக்கவில்லை என்று உறுதியாகத் தெரிவிக்கின்றது.
 
Top