புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

இராசிபலன்கள்(27-5-2013 முதல் 02-06-2013 வரை)ஜாதகப் பொருத்தத்தில் யோனி பொருத்தம் என்றால் என்ன? சூத்திரர்களுக்கு யோனிப் பொருத்தம் கட்டாயம் என்கின்றார்கள் ஜோதிடர்கள். - பொருத்தமில்லையே! யோனி என்றால் பெண்குறி. திருமணப் பொருத்தத்தில் யோனிப் பொருத்தம் சூத்திரர்களுக்கு உரியது
என்கின்றார்கள். 10 வகை திருமணப் பொருத்தத்தில் சில பொருத்தங்களை சில சாதிகளுக்கு கட்டாயம் என்கின்றார்கள்.


தேர்வுகளில் கட்டாயமாக பதில் அளிக்க வேண்டியவை என்று சில கேள்விகள் இருக்கும், அதைப்போல சில சாதிகளுக்கு சில கல்யாணப் பொருத்தங்கள் கட்டாயம்.

பார்ப்பனர்களுக்கு தினப் பொருத்தம், சத்திரியர்களுக்கு கணப் பொருத்தம், வைசியர்களுக்கு ராசிப் பொருத்தம், சூத்திரர்களுக்கு யோனிப் பொருத்தம் கட்டாயம் என்கின்றார்கள் ஜோதிடர்கள்.

சரி யோனிப் பொருத்தம் என்றால் என்ன? யோனி என்றால் பெண்குறி.

ஜோதிடர்கள் 27 நட்சத்திரங்களையும் சில மிருகங்களாகப் பிரித்திருக்கின்றார்கள்.

அசுவனியும் சதயமும் - குதிரை யோனி, 
பரணி,ரேவதி- யானை யோனி, 
பூசம்,கார்த்திகை - ஆடு யோனி,
ரோகினி,மிருகசீருடம் - சர்ப்பம்(பாம்பு ) யோனி,
மூலம், திருவாதிரை- நாய் யோனி,
இப்படியே பிரித்திருக்கின்றார்கள்.

இதிலும் மூலமும் திருவாதிரையும் நாய் யோனி என்றால் முதலில் வரும் மூலம் ஆண் நாய் எனக் கொள்க, இரண்டாவதாக வரும் திருவாதிரை பெண் நாய் எனக் கொள்க. இப்படி இருந்தால் பொருத்தம் இருக்கிறது என்கின்றார்கள்.

சரி,இதோடு விட்டார்களா என்றால் இல்லை. ஒவ்வொரு நட்சத்திர மிருகத்திற்கும் பகை - எதிரி மிருகம் - நட்சத்திரம் வைத்திருக்கின்றார்கள்.

அசுவனிக்கும் சதயத்திற்கும் எருமை பகை. அசுவனி, சதயத்திற்கு - சுவாதியும் கஸ்தமும் பகை நட்சத்திரங்கள். எனவே பொருந்தாது. அசுவனி,சதயம் சுவாதியும் கஸ்தம் என்கின்றார்கள்.

உலக வழக்கப்படியே பார்த்தால் குதிரையும், எருமையும் பகை மிருகங்களா? ஒன்றையொன்று பார்த்தால் மோதவா செய்கின்றன- சண்டையா போடுகின்றன- எருமை எருமையாக நிற்கின்றது, பார்த்துக் கொண்டே குதிரை ஓடிக் கொண்டிருக்கின்றது.

ஆனால் ஜாதகப் பொருத்தத்தில் அசுவனி நட்சத்திரத்தில் பிறந்தவர்களும் சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களும் குதிரை யோனியாம். சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களும், கஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களும் எருமை யோனியாம். குதிரை யோனியும் எருமை யோனியும் பகையாம். அதனால் ஜாதகம் பொருந்தவில்லையாம் - திருமணம் நடக்கக் கூடாதாம்!

ஜாதகத்தைத் தூக்கிக்கொண்டு பொருத்தம் பார்த்துச் சொல்லுங்கள் என்று எந்த ஜோதிடக்காரனிடமும் போகலாமா?

எப்படி நட்சத்திரத்தையெல்லாம் மிருகங்களாகப் பிரித்தார்கள்.?

குதிரை, யானை, ஆடு, சர்ப்பம், நாய், பூனை, பெருச்சாளி, பசு, எருமை, புலி, மான், குரங்கு, சிங்கம், கீரி என்று 14 மிருகங்களுக்கு27 நட்சத்திரத்தை பிரித்திருக்கின்றார்கள்.

ஏன் இந்த மிருகங்களில் கடவுள் அவதாரமான பன்றியைக் காணவில்லை, கழுதையைக் காணவில்லை. காளை மாட்டைக் காணவில்லை?ஜோதிடக்காரர்கள் ஒன்றும் செய்வதில்லை.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top