புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

கடும் எதிர்ப்புகளையும் மீறி இங்கிலாந்தில் திருமணம் செய்துகொண்ட பாகிஸ்தானை சேர்ந்த பெண் ஓரினச்சேர்க்கையாளர் ஜோடி, தங்களுக்கு தஞ்சம் அளிக்கும்படி இங்கிலாந்து அரசிடம் மனு அளித்துள்ளது.


பாகிஸ்தானின் லாகூர் பகுதியை சேர்ந்த பெண்களான ரிஹானா கவுசர் (34), சோபியா கமர் (29) ஆகியோர் இங்கிலாந்தில் உள்ள பரிமிங்கம் பல்கலைக்கழகத்தில் படித்து வந்தனர்.

கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னர் இவர்கள் ஒருவருக்கொருவர் அறிமுகம் ஆனார்கள். பின்னர் அடிக்கடி நிகழ்ந்த சந்திப்பின் விளைவாக பழக்கம் நெருக்கம் ஆனது.

இதனையடுத்து, தெற்கு யார்க்ஷைர் பகுதியில் உள்ள வாடகை வீட்டில் இவர்கள் ஜோடியாக வாழ்ந்தனர்.

ஓரினச்சேர்க்கையாளர் திருமணம் செய்து கொள்ள பாகிஸ்தான் அரசின் சட்டங்கள் அனுமதிப்பதில்லை. மேலும் இவ்வகையிலான உறவு குற்றமாகவும் கருதப்படுகிறது. அதனால் ரிஹானா – சோபியா இணையரின் இல்லறத்துக்கு பாகிஸ்தானில் வசிக்கும் உறவினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இவர்களின் நெருக்கத்தைப் பற்றி அரைகுறையாக அறிந்த இங்கிலாந்து முஸ்லிம்களும் ரிஹானாவும் சோபியாவும் உடனடியாக பிரிந்துவிட வேண்டும். இல்லை என்றால் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என கொலை மிரட்டல் விடுத்தனர்.

இதனையடுத்து, இம்மாதத்தின் முதல் வாரத்தில் அவர்கள் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். இந்த திருமணத்தை நடத்தி வைக்க இஸ்லாமிய மதகுரு யாரும் முன் வராததால் அவர்கள் பதிவு திருமணம் செய்துக்கொண்டனர்.

திருமண சான்றிதழை இங்கிலாந்து குடியுரிமை அதிகாரிகளிடம் சமர்ப்பித்த ரிஹானா – சோபியா ஜோடி தங்களுக்கு இங்கிலாந்தில் வசிக்கும் நிரந்தர குடியுரிமை வழங்க வேண்டும் என்று கேட்டு மனு செய்துள்ளது.

திருமணத்துக்கு பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ரிஹானா கூறியதாவது:-

பாகிஸ்தானில் உள்ளவர்கள் மற்றவர்களின் வாழ்வை நிர்ணயிக்கும் உரிமையும் அதிகாரமும் தங்கள் கையில் தான் உள்ளது என்று நினைக்கின்றனர். இது சரியான அணுகுமுறை அல்ல.

இங்கிலாந்தில் எங்கள் உரிமைகளுக்கு மதிப்பளிக்கப்படுகிறது. யாருடன் வாழ்வது என்பது பெண்களின் தனிநபர் உரிமை.

எங்கள் வாழ்க்கையை எப்படி வாழ்கிறோம் என்று கண்காணிக்கும் அதிகாரம் யாருக்கும் கிடையாது. இவ்வாறு அவர் கூறினார்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top