புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


தாயையும் மகளையும் கரம் பிடித்த ஒருவருக்கு நீதிமன்றம் சிறைத்தண்டனை விதித்துள்ளது.
 ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய் மற்றும் மகளை திருமணம் செய்து கொண்ட ஒருவருக்கே இவ்வாறு
தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

முதல் திருமணம் பற்றிய தகவல்களை வழங்க மறுத்தமை மற்றும் இரண்டு திருமணங்களை செய்து கொண்டமைக்காக குறித்த நபருக்கு அவிசாவெல்ல நீதிமன்றம் தலா மூன்று மாத காலங்களான இரண்டு கடூழிய சிறைத்தண்டனைகளையும், ஐந்து ஆண்டு கால ஒத்தி வைக்கப்பட்ட சிறைத்தண்டனையும் விதித்துள்ளது.

 சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு 75000 ரூபா நட்ட ஈடு வழங்க வேண்டுமென மேலும் உத்தரவிடப்பட்டுள்ளது.

 தற்போது 44 வயதான பெண்ணை 2009ம் ஆண்டில், கெட்டஹெத்தா விவாகப் பதிவு காரியாலயத்தில் திருமணம் செய்து கொண்டதுடன், 2012ம் ஆண்டில் தெரனியகல விவாகப் பதிவு காரியாலயத்தில் 20 வயதான மகளையும் குறித்த நபர் திருமணம் செய்து கொண்டுள்ளார்.

 தனது தாயின் கணவர் எனத் தெரிந்தும், திருமண பந்தத்தில் மகள் இணைந்து கொண்டமையினால் சம்பவத்தில் முதல் மனைவியான குறித்த மகளின் தாயே சம்பவத்தில் பாதிக்கப்பட்டுள்ளார்.

 மகளை ஏற்றுக் கொள்வதாக குறித் நபர் நீதிமன்றில் அறிவித்துள்ளார்.
 
Top