புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

இங்கிலாந்தில் உள்ள ஒரு மையத்தில் பிரபல ஓவியர்களின் ஓவியங்கள் ஏலம் விடப்பட்டன. இதில், இந்தியாவின் பிரபல ஓவியர் வாசுதியோ எஸ்.கெய்டோன்ட் என்பவரின் ஓவியங்களும்
இடம் பெற்றன. அவற்றில், அவரது 2 ஓவியங்கள் ரூ.10 கோடிக்கு ஏலம் போயின.

இங்கிலாந்தை சேர்ந்த நபர் ஒருவர் ரூ.5.5 கோடிக்கு ஏலத்தில் எடுத்தார். மற்றொரு ஓவியம் ரூ.4.3 கோடிக்கு ஏலம் போனது. ரூ.5.5 கோடிக்கு ஏலம் போன ஓவியம் 1960-ம் ஆண்டுகளில் வரையப்பட்டது.

வாசுதேவ் எஸ்.கெய்டோண்ட் இந்தியாவின் புகழ்பெற்ற ஓவியர்களில் ஒருவர். மரட்டிய மாநிலம் நாக்பூரை சேர்ந்த இவர் அரசின் பத்மஸ்ரீ விருதை பெற்றுள்ளார். கடந்த 2001-ம் ஆண்டு இவர் மரணம் அடைந்தார்.

அதே நேரத்தில், இந்த ஏலத்தில் இந்தியாவின் மற்றொரு ஓவியரான எம்.எப்.உசேனின் ஓவியங்களும் இடம்பெற்றன. ஆனால், அவரது ஓவியத்தை ஏலம் எடுக்க யாரும் முன் வரவில்லை.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top