புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

செகோஸ்லோவேக்கியா நாட்டை சேர்ந்த 23 வயது இளம்பெண்ணுக்கு ஒரே பிரசவத்தில் 5 குழந்தைகள் பிறந்துள்ளன.


1949ம் ஆண்டிற்கு பிறகான அந்நாட்டின் வரலாற்றில் ஒரே பிரசவத்தில் 5 குழந்தைகள் பிறந்திருப்பது இதுதான் முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

செகோஸ்லோவேக்கியாவை சேர்ந்த அலெக்சாண்டிரா கினோவா(23) என்ற பெண் பிரசவத்திற்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இவருக்கு ஏற்கனவே ஒரு ஆண் குழந்தை உள்ளது.

நேற்று ‘சிசேரியன்’ முறையில் நடைபெற்ற பிரசவத்தில் 4 ஆண் குழந்தைகளையும், 1 பெண் குழந்தையையும் இவர் ஈன்றெடுத்தார். இயற்கையான முறையில் கருத்தரித்த இந்த 5 குழந்தைகளும் 1.05 கிலோவுக்கும் 1.34 கிலோவுக்கும் இடைப்பட்ட எடையில் நல்ல நிலையில் பிறந்ததாக டாக்டர்கள் கூறுகின்றனர்.

480 ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் இதுபோல் ஒரே பிரசவத்தில் 5 குழந்தைகள் பிறக்கும் அரிய வாய்ப்புள்ளது என்பதால் பிரசவத்தின்போது சுமார் 40 டாக்டர்கள் பணியாற்றியதாக ஆஸ்பத்திரி நிர்வாகம் கூறியுள்ளது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top