புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

இந்தியாவில் மனைவியை கொலை செய்து காரில் உடலைக் கடத்திய கணவரை சந்தேகத்தின் அடிப்படையில் விசாரிக்கப்போக உண்மையை ஒப்புக் கொண்ட அவரை போலீஸ் கைது செய்து விசாரித்த போது பல ஆண்களுடன் தொடர்புடைய
தன் மனைவியைக் கொலை செய்தேன் என்று ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார்.

பெங்களூர் காமாட்சி பாளையத்தைச் சேர்ந்தவர் சீனிவாஸ் என்ற 35 வயது நபர் தனது 30 வயது மனைவி பிரேமாவைக் கொலை செய்த வழக்குதான் இது:

நேற்று முன் தினம் சீனிவாஸின் கார் தர்மபுரியில் நின்று கொண்டிருந்தபோது ரோந்து வந்த போலீசின் சந்தேகப்பார்வைக்கு இரையானார். அவரை விசாரித்தபோது தனது மனைவி பிரேமாவைக் கொலை செய்து காரில் கடத்திவந்த விவரம் தெரியவந்தது.

பிறகு சீனிவாஸ் போலீசில் வாக்குமூலம் அளித்தார். அந்த வாக்குமூலம் வருமாறு:

பெங்களூரில் லாரி வைத்துள்ள நான் காண்டிராக்ட் தொழிலும் செய்து வருகிறென். எனது மனைவி பிரேமா, பல ஆண்ட்களுடன் பழகி வந்தார். மேலும் அவர் சிலருடன் லாட்ஜுக்கும் சென்று உல்லாசமாக திரிந்து வந்ததை அறிந்தேன். இதை நான் கண்டித்தேன்.

ஆனால் மனைவி சொல்பேச்சு கேட்கவில்லை. இதனால் அவரை கொலை செய்ய முடிவு செய்தேன். கடந்த 18ஆம் தேதி கோவிலுக்குச் செல்லலாம் என்று பிரேமாவை காரில் அழைத்து வந்தேன். அத்திப்பள்ளி வழியாக ஓசூர் பக்கம் வந்த நான் இங்கு தங்கினேன்.

19ஆம் தேதி பல இடங்களில் சுற்றினேன். 20ஆம் தேதி அதிகாலை...காரில் ஓசூர் சிப்காட் மின்வாரிய அலுவலகம் அருகில் உள்ள காலி இடத்திற்கு வந்தேன். அங்கு துணியால் எனது மனைவி பிரேமாவின் கழுத்தை நெரித்தேன். இதை சற்றும் எதிர்பாராத பிரேமா, என்னிடம் இருந்து தப்பிக்க திமிறினாள்.

ஆனால் விடாமல் நான் அவளைக் கொன்றேன். பிறகு பிணத்தை எங்காவது போட்டு விடலாம் என்று காரை ஓட்டினேன். காரின் கதவுகளில் கறுப்பு நிற கண்ணாடி இருந்ததால் காருக்குள் பிணம் இருந்ததை யாரும் கண்டுபிடிக்கவில்லை.

பிணத்துடன் சென்ற நான் நடுவில் மது குடித்தேன், காரிமங்கலம் பக்கமாக சென்ற போது எனக்கு தூக்கம் வந்தது. இதனால் சாலையோரம் காரை நிறுத்தி விட்டு தூங்கினேன். அபோதுதான் போலீஸார் பிடித்து விட்டனர்.

இவ்வாறு அவர் தன் வாக்குமூலத்தில் தெரிவித்தார். இதனையடுத்து அவர் சேலம் சிறையில் அடைக்கப்பட்டார்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top