புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

சீனாவில் உள்ள சீஜியாங் என்ற இடத்தில் பொது கழிவறை குழாயில் பிறந்த குழந்தை ஒன்று சிக்கி கிடந்தது. அந்த குழந்தை பத்திரமாக மீட்கப்பட்டது.



திருமணம் ஆகாத பெண் ஒருவர் இந்த குழந்தையை பெற்றெடுத்து கழிவறை குழாய்க்குள் வீசி இருந்தது தெரிய வந்தது.

சீனாவில் ஒரு குழந்தைக்கு மேல் பெற்றால் அவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் அங்கு திருமணம் ஆகாமலே குழந்தை பெற்றுக் கொள்வது அதிகரித்துள்ளது.

கழிவறை குழாய்க்குள் குழந்தை மீட்கப்பட்ட சம்பவம் சீனாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையடுத்து திருமணம் ஆகாமல் குழந்தை பிறப்பதை தடுக்க சீன அரசு தீவிரமாக ஆலோசித்து வருகிறது.

அங்குள்ள வாஹூன் பிராந்தியத்தில் திருமணம் ஆகாமல் குழந்தை பெற்றால் அவர்களுக்கு அபராதம் விதிக்க மாகாண அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான சட்டம் உருவாக்கப்பட்டு வருகிறது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top