புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


புற்றுநோயால் அவதியுற்று வந்த நோபல் பரிசு பெற்ற பிரபல பெண் சுற்றுச்சூழல் ஆர்வலர் வேங்காரிமாத்தாய் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.
ஆப்ரிக்க நாடான கென்யா நாட்டைச் சேர்ந்தவர் வேங்காரிமாத்தாய்(71) . நீண்ட காலமாக புற்றுநோயினால் பாதிக்கப்பட்டிருந்தார். நைரோபி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இவர் சிகிச்சைபலனின்றி கடந்த ஞாயிறன்று இறந்ததாக அவரது உறவினர்கள் தெரிவித்தனர்.

இவர் கடந்த 1977ம் ஆண்டு கென்யாவில் “பசுமை இயக்கம்” என்ற அமைப்பை நிறுவினார். உலகினை சுற்றுச்சூழலிருந்து காப்பாற்ற வேண்டும் என்பதற்காக பல ஆண்டுகளாக ‌போராடி வந்தார். இவரது அயராத முயற்சியால் ஆப்ரிக்கா முழுவதும் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் 40 மில்லியன் மரக்கன்றுகள் நடப்பட்டன.
1980களில் சுற்றுச்சூழ‌லால் ‌நைரோபி நகரம் மாசுபடர்ந்து வருவதை அறிந்த மாத்தாய் இனி தலைநகரான ‌நைரோபி நகரில் உயர்ந்த கட்டிடங்கள் கட்ட எதிர்ப்பு தெரிவித்து வந்தார்.
அப்போதைய அரசை எதிர்த்து போராடியதற்காக சிறை சென்றார். இவரது சிறந்தபணியினை பாராட்டி கடந்த 2004ம் ஆண்டு இவருக்கு சுற்றுச்சூழலுக்கான நோபல் பரிசு வழங்கி கெளரவிக்கப்பட்டது.
நோபல் பரிசினை பெறும் முதல் ஆப்ரிக்க பெண் என்ற பெருமையினை பெற்றார். கடந்த 2002ம் ஆண்டு ‌கென்யா நாட்டின் எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் சுற்றுச்சூழல் துறை அமைச்சராகவும் பொறுப்பேற்றார்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top