புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு



newsயாழ்.மாவட்டத்தில் கடந்த ஜனவரி மாதம் தொடக்கம் நேற்று முன்தினம் வரை 258 பேர் டெங்கு நோயின் தாக்கமாக இருக்கலாம் என்ற சந்தேகத்தில் வைத்தியசாலைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.அவர்களில் 155 பேர் டெங்கு நோயின் தாக்கத்துக்குள்ளாகியிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டுள்ளது.


எனினும் சிகிச்சை பயனளிக்காது இவர்களில் மூன்று பேர் மரணமாகியுள்ளனர். யாழ். சுகாதார சேவைகள் திணைக்கள சுகாதாரக் கல்வித்திட்ட அதிகாரி எஸ்.பிரணவன் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.

இதுவரையான காலப்பகுதியில் கடந்த ஜனவரி மாதமே அதிகளவானோர் டெங்கால் பீடிக்கப்பட்டனர். டெங்கு என்ற சந்தேகத்தில் 60 பேர் அனுமதிக்கப்பட்டு அவர்களில் 53 பேருக்கு டெங்கு இருந்ததை கண்டறியப்பட்டது. ஜனவரி மாதத்தில் டெங்கால் ஒருவர் உயிரிழந்தார்.

பதினொரு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைகளுடன் ஒப்பிடும்போது யாழ். சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக் குட்பட்ட பகுதியிலேயே அதிகமானோர் டெங்கால் பாதிக்கப்பட்டனர். இங்கு இதுவரை 65 இற்கும் மேற்பட்டோர் டெங்கால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கோப்பாய், பருத்தித்துறை மற்றும் யாழ்ப்பாண சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளி லிருந்து ஜனவரி மாதம் ஒரு வரும் கடந்த மாதம் இருவருமாக மூன்று பேர் டெங்கு நோயால் மரணமாகியுள்ளனர்.

இந்த மாதம் நேற்று முன்தினம் வரையான காலப்பகுதியில் 30 பேர் டெங்கு நோயாக இருக்கலாம் என்ற சந்தேகத்தில் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களில் 7 பேருக்கு டெங்கு நோய் இருப்பது கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த மாதம் இறப்புகள் எதுவும் பதிவாகவில்லை.
இதேவேளை, சகல சுகாதார வைத்திய அதிகாரிகள் பணிமனைகள் ஊடாகவும் தொடர்ந்தும் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்று அவர் மேலும் தெரிவித்தார்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top