புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


உயர் இரத்த அழுத்தம் என்பது இன்றைய கால கட்டத்தில் பரவலாக பேசப்பட்டு வரும் ஒரு வியாதியாக கருதப்படுகிறது. பெரிய வியாதிகளுக்கு வழிவகுக்கும் ஒரு திறவுகோலாக இது அமைகிறது.
இயந்திரம் போல செயல்படும் நம் உடலை இயக்க இரத்தம் ஒரு முக்கிய பங்கினை வகிக்கிறது. நம் இருதயமே உடலுக்கு தேவையான இரத்தத்தை இரத்த குழாய்கள் மூலம் செலுத்துகிறது. 



இரத்த அழுத்ததிற்கு என்று குறிப்பிட்டு சொல்லும் அளவிற்கு எந்தவித காரணங்களும் இல்லை, ஆனால் மாறிவரும் மக்களின் வாழ்க்கை முறையே இதன் முக்கிய காரணம்.


ஒரே இடத்தில் அமர்ந்து வேலைப் பார்க்கும் நிலைக்கு மக்கள் தள்ளப்படுகின்றனர். மேலும் உடல் பருமன், போதைப்பழக்கம், இதனால் உடல் மற்றும் மனம் சோர்வு நிலையை அடைகிறது.


இதனால் இரத்த ஓட்டத்தில் உண்டாகும் மாற்றமே இரத்த அழுத்தத்தை ஏற்படுத்துகிறது.


மேலும் வம்சா வழியாக உருவாகும் மரபணு மாற்றங்கள் கூட இரத்த அழுத்தத்தை உண்டாக்குவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.


இத்தகைய உயர் இரத்த அழுத்ததை வருமுன் தடுப்பதற்கான வழிமுறைகள் பின்வருமாறு:


* உடல் உழைப்பு இன்றி, அமர்ந்த நிலையில் செய்யும் வேலையால் இரத்த அழுத்தம் அதிகரிக்கிறது. எனவே ஓய்வு நேரங்களில் உடற்பயிற்சி செய்தல் நல்லது.


* காலை நேரங்களில் யோகாசனம், தியானம் போன்ற நிலைகளில் மனதை கொண்டு செல்வதன் மூலம் மனம் மற்றும் உடல் அமைதி நிலையில் இருப்பதுடன் இரத்த ஓட்டத்தின் நிலை ஆரோக்கியமாக இருக்கும்.


மேலும் உடலையும், மனதையும் அமைதியாகவும், ஆரோக்கியமாகவும் வைத்திருப்பதன் மூலமாக இரத்த அழுத்தம் உண்டாவதை தவிர்த்து மேலும் பல கடுமையான நோய்கள் உண்டாவதை குறைத்து நோயற்ற வாழ்க்கையை வாழலாம்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top