லேடிபேர்ட் என்ற வண்டு ரத்தத்தில் இருந்து காசநோய்க்கு(டி.பி) மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.மலேரியா, எம்.ஆர்.எஸ்.ஏ எனப்படும் நோய் எதிர்ப்பு சக்தியை முறியடிக்கும் பக்டீரியா தொற்று ஆகியவற்றையும் இந்த மருந்து குணப்படுத்தும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ஜெர்மனி உர்ஸ்பர்க் பல்கலைக்கழக மருத்துவர்கள் மேற்கொண்ட ஆய்வில் தெரிய வந்துள்ள தகவல் வருமாறு: நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் நோய் தீர்வு குறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் ஹார்லேக்வின் லேடி பேர்ட் வண்டுவின் பிசுபிசுப்பான ரத்தம் நோய் கிருமிகளை தாக்கி அழிப்பது தெரிய வந்துள்ளது.
இதை தீவிர ஆய்வுக்கு உட்படுத்தியதில் பறவையின் ரத்தம் மலேரியா, டிபி, எம்.ஆர்.எஸ்.ஏ எனப்படும் நோய் எதிர்ப்பு சக்தியை முறியடிக்கும் பக்டீரியா கிருமிகளை அழிப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதன்மூலம் தயாரிக்கப்படும் மருந்து, நோய்களை எளிதில் விரட்டவும் பூரண குணம் அடையவும் உதவும்.
சோதனைக்கூட ஆய்வில் எதிர்பார்த்ததைவிட இந்த மருந்துக்கு அதிக வெற்றி கிடைத்துள்ளது. இது குறித்த ஆய்வு தொடர்ந்து நடந்து வருகிறது.
0 கருத்து:
கருத்துரையிடுக