புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


தேர்தல் நடைபெறும் இந்த நேரத்தில் பத்திரிக்கையாளர்களைச் சந்தித்தது ஏன் என்று விளக்கம் கேட்டு
கன்னட நடிகை குத்து ரம்யாவுக்கு கர்நாடக மாநில இளைஞர் காங்கிரஸ் தேர்தல் அதிகாரி நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.


குத்து ரம்யாவின் தாத்தா எஸ்.எம்.கிருஷ்ணா. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர் கிருஷ்ணா, வெளியுறவு அமைச்சராக இருக்கிறார். இவரது வழியில் இப்போது குத்து ரம்யாவும் அரசியலில் குதித்துள்ளார்.

கடந்த ஏப்ரல் மாதம் காங்கிரஸில் இணைந்த அவர் சாந்திநகர் பூத் கமிட்டி இளைஞர் காங்கிரஸ் தலைவராக தேர்வு பெற்றார். தற்போது மாநிலத் தலைவர் பதவிக்குக் குறி வைத்துள்ளார்.

இதற்காக ஆதரவு திரட்டும் வகையில் பத்திரிகைகளுக்குப் பேட்டிகள் கொடுத்து அங்கு புயலைக் கிளப்பியுள்ளார். ரம்யாவின் இந்த பேட்டி அரசியல், மாநில காங்கிரஸாரை, குறிப்பாக இளைஞர் காங்கிரஸ் தலைவர் பதவிக்கு குறி வைத்திருப்போரை எரிச்சலுக்குள்ளாக்கியஉள்ளது. இதையடுத்து ரம்யாவைத் தட்டி வைக்குமாறு அவர்கள் தேர்தல் அதிகாரிக்கு புகார்களை அனுப்பினர்.

இதையடுத்து தேர்தல் நடைபெறும் இந்த நேரத்தில் பேட்டி கொடுப்பது ஏன் என்று விளக்கம் கேட்டு குத்து ரம்யாவுக்கு தேர்தல் அதிகாரி நோட்டீஸ் கொடுத்துள்ளார்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top