புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


இங்கிலாந்தை சேர்ந்த ஒரு மூதாட்டி தனது தோட்டத்தில் உலகின் மிக நீளமான வெள்ளரிக்காய் விளைந்திருப்பதாக குறிப்பிடுகின்றார். திருமதி பியர்ஸ் எனும் 78 வயதான மூதாட்டியே இவ் வெள்ளரிக்காய்க்கு சொந்தக்காரியாவர். இது உலகின் நீளமான வெள்ளரிக்காயாக பதியப்பட வேண்டும் என தான் காத்திருப்பதாகவும்
குறிப்பிடுகின்றார். இதற்கு முன்னர் இவ்வாறு சாதனையாக பதியப்பட்டு வெள்ளரிக்காய 47 இஞ் நீளமுடையதாக காணப்பட்டது. ஆனால் இவரது காய் 43 இஞ் நீளமுடையதாக காணப்படுகிறது. உலகின் இரண்டாவது நீளமான வெள்ளரிக்காயாக இடம் பிடிக்கும் என கூறப்படுகிறது. எனவே விரைவில் இது கின்னஸ் புத்தகத்தில் பதியப்படும் என நம்பிக்கை தெரிவிக்கின்றார் பியர்ஸ் எனும் பாட்டி.
இச்சாதனை பற்றி குறிப்பிட்ட இவர். இதற்காக நான் எதுவும் விசேடமாக செய்துவிடவில்லை . வெறும் தண்ணீர் மட்டுமே ஊற்றி வந்தேன். ஒரு முறை எனது வீட்டில் பழைய வெள்ளரிக்காய்களின் விதைகள் காணப்பட்டது. இதனை பயிரிட்டால் என்ன என்று எனது தோட்டத்தில் பயிரிட்டேன். அதுவே இவ்வாறு நீளமாக வளர்ந்துள்ளது. இதற்கு முன்னர் நான் வெள்ளரிக்காய்களை பயிரிட்டது கிடையாது என குறிப்பிட்டுடார்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top