சீனா இலங்கையில் தொலைக்காட்சி நிலையமொன்றை அமைக்கத் திட்டமிட்டுள்ளது. சீன மொழியைப் பிரபல்யப்படுத்தும் நோக்கில் இந்த தொலைக்காட்சி நிலையம் அமைக்கப்படவுள்ளது.கல்வி நிகழ்ச்சிகள் ஒளிபரப்புச் செய்யப்பட உள்ளதாகவும், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் அதிபர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இலங்கைக் கல்வி அமைச்சர் பந்துல குணவர்தனவிற்கும் சீன கல்வி அமைச்சர் யுவான் குய்ரேனுக்கும் இடையில் நடைபெற்ற பல சுற்று பேச்சுவார்த்தைகளின் பின்னர், தொலைக்காட்சி நிலையம் ஒன்றை அமைக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இலங்கை மாணவர்களுக்கு அளிக்கப்படும் புலமைப் பரிசில்களின் எண்ணிக்கையை அதிகரிக்க சீனா இணக்கம் வெளியிட்டுள்ளது.
சீன கல்வி முறைமை தொடர்பில் ஆய்வு செய்யும் நோக்கில் கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன அண்மையில் சீனாவிற்கு விஜயம் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
0 கருத்து:
கருத்துரையிடுக