இத்தாலி தலைநகர் றோமை தாக்கிய புயல் காற்றை அடுத்து ஏற்பட்ட வெள்ளத்தினால் இலங்கையர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.உயிரிழந்த 32 வயதான இலங்கையரின் சடலத்தை மீட்புப் பணியாளர்கள் கண்டுபிடித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்திவெளியிட்டுள்ளனர்.
குறித்த இலங்கையர்கள் தங்கியிருந்த கட்டடத்தின் கீழ் மாடி நீரில் மூழ்கியதாக தெரிவிக்கப்படுகின்றது.
வெள்ளம் காரணமாக றோம் நகருக்கான ரயில் சேவைகள் ஸ்தம்பிதமடைந்துள்ளதுடன் வாகனங்கள் செயலிழந்துள்ளதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
0 கருத்து:
கருத்துரையிடுக