புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


‘சிவப்பதிகாரம்', ‘குரு என் ஆளு' உள்ளிட்ட படங்களில் நடித்தவர் மம்தா மோகன்தாஸ். கல்யாணம் ஆனபிறகுகூட சில ஹீரோயின்கள் குழுந்தைகளுக்கு அம்மாவாக நடிக்க மறுத்து வரும் வேளையில் ஹீரோயினாக நடித்துக்கொண்டிருக் கும் மம்தா 2 குழந்தைகளுக்கு அம்மாவாக நடிக்க சம்மத்தித்திருக்கிறார்.

மல்லுவுட்டில் கே.கே.ராஜீவ் இயக்கும் ‘நானும் என்டே பேமலியும் படத்தில் 2 குழந்தைகளுக்கு அம்மா வேடம் ஏற்றிருக்கிறார்.

‘அம்மா வேடத்தில் நடித்தால் இமேஜ் பாதிக்காதா? என்று கேட்டபோது, ‘2 குழந்தைகளுக்கு அம்மாவாக நடிப்பதால் என் இமேஜ் பாதிக்காது. எனக்கு குழந்தைகள் என்றால் பிடிக்கும். அவர்கள் மீது எப்போதும் அன்பாக இருப்பேன்.

இப்படியொரு வேடம் ஏற்பதால் என்னை ரசிகர்களுடன் இன்னும் நெருக்கமாக இணைத்துக்கொள்ள முடியும். இதில் ஜெயராமுடன் நடிக்கிறேன். டாக்டராக எனது தொழிலில் கவனம் செலுத்தும் நான், அம்மாவாக எனது பொறுப்பை எப்படி சரிசமமாக செய்ய முடிகிறது என்பதை இப்பாத்திரம் சொல்லும்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top