புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


ஆயிரத்தில் ஒருவன் படத்துக்குப் பிறகு வாய்ப்புகளே இல்லாமல் இருந்த ரீமாசென் இப்போது புதுமுக நடிகர்களுடன் நடிக்கிறார்.
இவர் ஓட்டல் அதிபரை திருமணம் செய்யப் போவதாக கூறப்பட்ட நிலையில், இப்போது மீண்டும் நடிக்க வந்துள்ளார்.

இந்த முறை அவர் ஒப்புக் கொண்டிருப்பது பிரபல நடிகர், இயக்குநர் படத்தில் அல்ல, புதுமுக நடிகர் பாஸ்கரன் நடிக்கிறார், புதிய இயக்குநர் ராஜ்குமார் இயக்கும் படம்.

ஏ ஆர் முருகதாஸிடம் உதவியாளராக இருந்தவர் இந்த ராஜ்குமார். ப்ளூ ஓசியன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு இசை ஜிவி பிரகாஷ், பூபதி ஒளிப்பதிவு செய்ய, ஆண்டனி எடிட்டிங்கை கவனிக்கிறார்.

நவம்பரில் படத்துக்கான போட்டோ ஷூட் நடக்கின்றது சில தினங்களுக்கு முன், ஜெஜெ டிவி பாஸ்கரன் சினிமாவில் நடிக்கபோவதாக அறிவித்திருந்தார்.

ஆனால், படத்தின் இயக்குநர், நடிகை பற்றி எந்த தகவலும் இல்லை என்று கூறியிருந்தார்.
இப்போது தயாராகும் இந்தப் படத்தின் நாயகன் பெயர் பாஸ்கரன், நாயகி பெயர் ரீமாசென் என்றும் கூறியுள்ளார்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top