புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


உலகத்தின் பெரிய குடும்பத்தை சந்தித்திருக்கிறோம். ஒரு மனைவியை மணம் செய்துகொண்டு கஷ்டப்படும் ஆண்களுக்கு மத்தியில் இவரொரு அவதார புருஷர். 39 மனைவிகளுடன் ஒரே இடத்தில் அதுவும் 94 பிள்ளைகளுடன் 100 அறைகளைக்கொண்ட அடுக்குமாடி
குடியிருப்பையே தனது அந்தப்புரமாக மாற்றி வைத்திருக்கும் Ziona Chana, சாதாரண சிறு கைத்தொழில் செய்பவர். பிள்ளைகளில் பலர் வேலை செய்வதால் குடும்பம் ஒருவாறு ஓடுகிறது.

மனைவிகளிடையே உள்ள ஒற்றுமை இன்னமும் இந்த குடும்பத்தை நிலைகுலைக்காமல் வைத்திருக்கிறது. ஒரு வேளை உணவுக்கு இவர்களுக்கு தேவைப்படும் உணவின் அளவு திருமண விருந்துக்கு பரிமாறப்படும் அளவை விட அதிகமாம்.

30 கோழிகள், 150 Kg உருளைக்கிழங்கு, 200௦௦ Kg அரிசி, இப்படி தினமும் இங்கு விருந்துதான். இதில் இன்னொரு சுவாரசியமான விடயம் ஒவ்வொரு இரவும் ஒவ்வொரு மனைவியுடனே கழிக்கிறாராம். அந்த வரிசை முடிந்தவுடன் மீண்டும் முதலிலிருந்து.. ஆஹா என்ன வாழ்க்கை !

இப்படியொரு பெரிய குடும்பத்தில் வாழ்வது தனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாக இவர் தெரிவிக்கிறார். உலக சனத்தொகை 7 பில்லியனை எட்டுகிறது.  இவர் போன்ற தொழிலதிபர்கள் இருந்தால் விரைவில் 8  பில்லியனையும் அடைந்துவிடும்.






0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top