புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


சீனாவில் நாய் கறி விற்பனை அதிகரித்து வருவதற்கு சீன விலங்குகள் பாதுகாப்பு அமைப்பு கடும் கண்டனம் தெரிவித்து வந்தது. இந்நிலையில், சிசுவான் மாகாணத்தில் உள்ள ஜிகாங் என்ற நகரில் விலங்குகள் பாதுகாப்பு அமைப்பினர் அதிரடியில் இறங்கினர்.

நகரில் உள்ள எல்லா இறைச்சி கடைகளும் திடீரென புகுந்தனர். அங்கு இறைச்சிக்காக வெட்டுவதற்கு வைத்திருந்த நாய்களை மீட்டனர். நகர் முழுவதும் இதுபோல் 800 நாய்கள் மீட்கப்பட்டதாக விலங்குகள் அமைப்பினர் தெரிவித்தனர்.

விலங்குகள் அமைப்பினர் ரெய்டு நடத்திய போது, பல கடைக்காரர்கள் ஏராளமான நாய்களை வேறு இடங்களுக்கு கொண்டு சென்று விட்டனர். எனினும், அவற்றை பறிமுதல் செய்த போது இறைச்சி கடை உரிமையாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து தகராறில் ஈடுபட்டனர். அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய பின் நஷ்ட ஈடாக 6 லட்சம் ரூபாயை விலங்குகள் பாதுகாப்பு அமைப்பினர் வழங்கினர்.

அதன்பின் நாய்களை மீட்டு வந்தனர். அந்த நாய்களை பராமரிக்க தேவையான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், விலங்குகளை கொல்ல கூடாது. நாய் கறியை சீனர்கள் இனி சாப்பிட கூடாது. இதற்கு வழி செய்ய தனி சட்டம் கொண்டு வரவேண்டும் என்றனர். கடந்த ஏப்ரல் மாதமும் இதேபோல் ரெய்டு நடத்தி ஐநூறுக்கும் அதிகமான நாய்களை விலங்குகள் பாதுகாப்பு அமைப்பினர் மீட்டது குறிப்பிடத்தக்கது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top