அமெரிக்காவைச் சேர்ந்த சிறுவன் மோஷே காய் கவலின் 9 வயதில் பட்டம் பெற்று சாதனை படைத்துள்ளான். இவன் தனது 8 வயதில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள கம்யூனிட்டி கல்லூரியில் சேர்ந்தான். ஒரே ஆண்டில் பட்டப்படிப்பை முடித்து சாதனை படைத்துள்ளான்.இது மட்டுமல்லாமல் இளம் வயதிலேயே வி கேன் டு (We Can Do)
என்ற பெயரில் ஆங்கிலத்தில் ஒரு புத்தகம் வெளியிட்டுள்ளான். 100 பக்கங்களைக் கொண்ட அதில் மற்ற சிறுவர்களும் தன்னை போல் குறுகிய காலத்தில் சாதனை படைக்க என்ன செய்ய வேண்டும் என்று எழுதியுள்ளான்.
அறிவாற்றல் நிறைந்தவர்களை ஜீனியஸ் என சொல்வார்கள். இந்த சிறுவனையும் அப்படித்தான் எல்லோரும் சொன்னார்கள். ஆனால் அதை அவன் ஏற்க மறுக்கிறான். கடுமையாக உழைத்தால் எல்லோருமே ஜீனியஸ் என புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளான்.இதுபோல் மாணவர்கள் தொலைக்காட்சி பார்ப்பதை குறைத்து கொள்ள வேண்டும் என்றும் கூறுகிறான். மேலும் அவன் புத்தகத்தில் கூறியுள்ளதாவது: ஜாக்கிசான் திரைப்படங்கள் என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும். ஆனாலும் ஒரு வாரத்துக்கு 4 மணி நேரம் மட்டுமே தொலைக்காட்சி பார்ப்பேன்.
மற்ற நேரங்களில் படிப்பில் கவனம் செலுத்துவேன். அதேநேரம் பொழுதுபோக்கு அம்சங்களிலும் தான் எனக்கு ஆர்வம் உண்டு. கால்பந்தாட்டம் எனக்கு பிடித்த விளையாட்டு என்று கூறியுள்ளார். தற்போது 14 வயதாகும் இந்த மாணவன் மேலும் ஒரு பட்டத்தையும் பெற்று சாதனை நிகழ்த்தியுள்ளான்.
0 கருத்து:
கருத்துரையிடுக