ஆடுங்கடா மச்சான் ஆடுங்கடா
அழகான பொண்ணப் பாத்து தேடுங்கடா
பாடுங்கடா மச்சான் பாடுங்கடா
பாவாடைப் பின்னால தான் ஓடுங்கடா
மத்தப் பொண்ணு எல்லாம் இந்த மாமன் பொண்ணுதான்
கைத்தட்டிக் கூப்புடுதே ரெண்டுக்கண்ணுதான்
ஏன்டான்னுக்கேட்க கேட்க வேண்டான்னு சொல்ல சொல்ல
யாருமே இல்ல இல்ல எங்களதான்
எப்போதும் எங்கப்பாடு மங்களந்தான்
எப்போதும் எங்கப்பாடு மங்களந்தான்
—
சிங்காரி நாத்தனா சிங்கிள் டீ ஆத்துனா
கோடுப்போட்ட கிளாஸ்சுல எனக்கு ஊத்துனா
தஞ்சாவூரு கச்சேரி தப்பாட்ட ஒய்யாரி
கல்யாணம் பன்னிக்கண்ணு காதக்கிள்ளுனாள்
பாம்பு புடிக்க மகுடி மகுடிதான்
பொண்ணப்புடிக்க கபடி கபடிதான்
பாம்பு புடிக்க மகுடி மகுடிதான்
பொண்ணப்புடிக்க கபடி கபடிதான்
ஆகாயம் மேலப்பாரு வான வேடிக்கை
அப்பனோடப் பொன்னு வந்தா கண்ணை மூடிக்க
ஊரோரம் கள்ளுக்கடை ஓடோடிவா வா
பங்காளி ஒன்னா சேர்ந்து பந்தாடலாம்
சித்தப்பன் பாக்கெட்டுல சில்லரைய எடுத்து
நாட்டாண்மை தின்ணையில சீட்டாடலாம்
தந்தானே தந்தானே தந்தானேனா
—
மங்கம்மா மாராப்பு மல்யுத்த வீராப்பு
சிக்குன்னு சிரிச்சாலே சிந்தும் மத்தாப்பு
ஆண்டாளு இடுப்புல அஞ்சாரு மடிப்புல
குத்தாட்டம் ஆடுதே கொத்து சாவிதான்
பல்லப்புடுங்க வாயக் காட்டுடா
பொண்ணப் புடிக்கப் பல்லக்காட்டுடா
பல்லப்புடுங்க வாயக் காட்டுடா
பொண்ணப் புடிக்கப் பல்லக்காட்டுடா
பாவாடைக்கட்டி வந்தா பச்சகுதுர
சேர்ந்துக்கிட்டு ஆட்டம் போட வாடி எதுர
ஆண்கோழி எங்களோட ஆட்டத்தப் பாரு
வான் கோழிப்போல வந்து ஜோடி சேரு
ஜான்புள்ள ஆனாக்கூட ஆண்புள்ள நான் தான்
ஏம்புள்ள என்னப்பாத்து ஓடிப்போற
ஜான்புள்ள ஆனாக்கூட ஆண்புள்ள நான் தான்
ஏம்புள்ள என்னப்பாத்து ஓடிப்போற
—
ஆடுங்கடா மச்சான் ஆடுங்கடா
அழகான பொண்ணப் பாத்து தேடுங்கடா
பாடுங்கடா மச்சான் பாடுங்கடா
பாவாடைப் பின்னால தான் ஓடுங்கடா
குத்த வசப் பொண்ணு எல்லாம் அத்தை பொண்ணு தான்
மத்தப் பொண்ணு எல்லாம் என் மாமன் பொண்ணுதான்
கைத்தட்டிக் கூப்புடுதே ரெண்டுக்கண்ணுதான்
ஏன்டான்னுக்கேட்க கேட்க வேண்டான்னு சொல்ல சொல்ல
யாருமே இல்ல இல்ல எங்களதான்
எப்போதும் எங்கப்பாடு மங்களந்தான்
0 கருத்து:
கருத்துரையிடுக