புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு



  1. அன்பான சொல் மருந்தாக இருப்பதோடு வாழ்த்தவும் செய்கிறது.
  2. உன் அன்பை மனைவியிடம் காட்டு; இரகசியத்தை அன்னையிடம் கூறு.
  3. எளிமையைப் பின் தொடர்ந்து சந்தேகம் வருகிறது.
  4. ஒரு செய்தியை நீ விளம்பரம் செய்ய வேண்டுமா? அதை மிக இரகசியமாக ஒரு பெண்ணிடம் கூறு.
  5. ஒரு கை மற்றொரு கையைக் கழுவுகிறது. இரண்டும் சேர்ந்து முகத்தைக் கழுவுகிறது.
  6. ஓடுகிறவன்தான் விழுவான்.
  7. கவலைக்கு மருந்து அதனைக் காலின் கீழ் போடுவதுதான்.
  8. குருடர் உலகில் ஒற்றைக் கண்ணன் அரசன்.
  9. சமாதானம் செய்து வைப்பவர் ஒருபோதும் தோல்வியே அடைவதில்லை.
  10. சமாதானம் விலைகொடுத்து வாங்கத் தகுந்தது.
  11. செயலே புகழ் பரப்பும்; வாய் அல்ல.
  12. சொந்தக் குழந்தை இல்லாதவன் மிகவும் அபாக்கியவான்.
  13. தூக்கி எறியும் குதிரையைவிட சுமந்து செல்லும் கழுதை மேலானது.
  14. தேன் இனித்தபோதிலும் அதை முள்ளோடு ஏற்காதே!
  15. பணம் பேசுகிறது; நாய்கள் குரைக்கின்றன.
  16. புத்தியுள்ளவன் மனதை மாற்றிக் கொள்வான். முட்டாள் அவ்வாறு செய்யமாட்டான்.
  17. பேராசை முடிகிற இடத்தில் மகிழ்ச்சி தொடங்குகிறது.
  18. பொன், பெண், ஆடை இவைகளைப் பகல் வெளிச்சத்தில் தேர்ந்தெடு
  19. நட்சத்திரங்கள் கூச்சல் இடுவதில்லை.
  20. நண்பன் இல்லாதபோது உன் கைத்தடியுடன் கலந்து ஆலோசனை செய்.
  21. நீ உன் தாய்க்குக் கீழ்படியாவிட்டால், உன் மாற்றாந் தாய்க்குக் கீழ்படிவாய்.
  22. நெருப்பு நெருப்பை அணைக்காது.
  23. மிகப்பெரிய உதவியும் உதவியே. மிகச்சிறிய உதவியும் உதவியே.
  24. மூன்று ஆண்கள் பெண்களைப் புரிந்துகொள்வதில்லை. அவர்கள் இளைஞர், வயோதிகர், நடுவயதினர்.
  25. நீதிபதியைவிட காலம்தான் உண்மையை வெளிக்கொணர்கிறது.
  26. நாணச் சிவப்பு நல்ல குணங்களின் வண்ணம்.
  27. ஓர் இளைஞனுக்கு மனைவி ஓர் ஆதாரம். கைத்தடி அவனுக்கு ஆடம்பரம். ஒரு முதியவருக்கு மனைவி ஓர் ஆடம்பரம். கைத்தடி அவருக்கு ஆதாரம்.
  28. ஆந்தைக்கூட தன் குஞ்சைப் பருந்தாகத்தான் எண்ணுகிறது.
  29. ஒவ்வொருவரும் தங்களை அறிவாளி என்று எண்ணிக்கொள்கிறார்கள். அதனால்தான் மிகப்பலர் முட்டாள்களாக இருக்கிறார்கள்.
  30. அறிவாளி பொன்னான நாட்களையே கணக்கிடுகிறான்.
  31. அறிவாளி தடுக்கி விழுந்தால் பலமாகத்தான் விழுவான்.
  32. நரகத்தின் கதவுகள் எப்போதும் திறந்திருக்கின்றன, நள்ளிரவிலும்கூட.
  33. உன்னை அளவின்றிப் புகழ்கின்றவன் ஏற்கனவே உன்னை ஏமாற்றிவிட்டான் அல்லது இனி ஏமாற்ற விரும்புகிறான்.
  34. ஆண்டவன் ஒரு கையால் நம்மை அடிக்கிறான். மற்ற கரங்களால் அணைக்கிறான்.
  35. செத்த சிங்கத்தை கழுதைகூட உதைக்கும்.
  36. உன் கௌரவம் உனது நாக்கில் உள்ளது.
  37. தாயைப் பார்த்து மகளை மணம் செய்.
  38. கணவன் தலைவன், மனைவி அவன் தலையிலிருக்கும் மகுடம்.
  39. பொறாமைக்காரன் துக்கப்படுவதால் ஒன்று அவன் தொல்லைகளில் இருக்க வேண்டும், அல்லது யாரோ சிலர் அதிர்ஷ்டம் அடைந்திருக்க வேண்டும்.
  40. வழியைத் தவற விடுவதைவிடப் பாதி வழியில் திரும்பிவிடுவது மேல்.
  41. நஞ்சு விற்பவன் அழகிய விளம்பரப் பலகையைப் பெற்றிருக்கிறான்.
  42. மின்னலால் தாக்குண்டவன் இடியோசையைக் கேட்கமாட்டான்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top