புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு



  1. சிவந்த மை பூசிய பெண்கள் வெட்கப்படாதவர்களாகவும் இருக்கலாம்.
  2. விரும்பியதைப் பெறமுடிவில்லையானால் பெற்றதையே விரும்புவோமாக.
  3. மெதுவாக பேசுகிறவன் பத்திரமாகப் பேசுகிறான். தூரமாக போகிறான்.
  4. முள் குத்தும் நெருஞ்சி விரைவில் வளர்ந்துவிடுகிறது.
  5. புதைக்கப்பட்டுள்ள செல்வத்திற்கும், மூடி மறைக்கப்படுள்ள செல்வத்திற்கும், மூடி மறைக்கப்பட்டுள்ள அறிவுக்கும் இடையில் வித்தியாசம் இல்லை என்பது எனக்குத் தெரியும்.
  6. எடுத்துக்கொள்பவனுக்கு உலகம் சொந்தம்.
  7. உலகம் எல்லாம் ஒரே தேசம்தான்.
  8. உலகம் என்பது உயர்ந்த புத்தகம். எப்படிப் படிப்பது என்று தெரியாதவனுக்கு அது சிறிதே பயன்படுகிறது.
  9. அதிர்ஷ்டம் என்பது ஒரு பசுமாடு. சிலருக்கு அது தனது முகத்தைக் காட்டுகிறது.
  10. வறுமை அழகைச் சிதைக்காது.
  11. அறிவுடைமை அழிந்து போவதில்லை. அறிவாளிகள் அழிந்து போகின்றனர்.
  12. மூடன் தன்னுடைய சொந்தச் செலவில் கற்றுக்கொள்கிறான். அறிஞன் மற்றவர்கள் செலவில் கற்கிறான்.
  13. மெல்லிய ஆடைகளைப் பெட்டிகளில் வைத்திருப்பவர் முரட்டுப் போர்வையை உடுத்துகின்றனர்.
  14. நூற்றில் ஓர் இளைஞர்தான் சபிக்கப்பட்டவர். இருபதில் ஓர் முதியவர்தான் ஆசீர்வதிக்கப்ட்டவர்.
  15. உண்மைதான் அடிக்கடி தண்டிக்கப்படுகிறது .
  16. வேலை செய்பவனுக்கு ஒரு சட்டை. வேலை செய்யாதவனுக்கு இரு சட்டைகள்.
  17. சாபங்கள் ஊர்வலங்களைப்போல எங்கே தொடங்கியதே அங்கே முடியும்.
  18. கடவுள் துணை இருந்தால் சிலந்தி வலையும் ஒரு சுவராகிறது கடவுள் கருணை இல்லாவிட்டால் சுவரும் சிலந்தை வலையாகிறது.
  19. குழந்தை கேட்கும் ‘ஏன்?’ தான் த்த்துவத்தின் சாவி.
  20. சேவல் மௌனமாகவும் கோழி கூவும்படியாகவும் உள்ள வீடு துன்பகரமானது.
  21. ஆன்மா இறைவனுக்குச் சொந்தம். உடம்பு மண்ணுக்குச் சொந்தம். சொத்து யாருக்குச் சொந்தம்?
  22. ஒரு சிறிய உண்மை முழுப் பொய்யையும் நம்பச் செய்துவிடுகிறது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top