பெண்களே முகப்புத்தகத்தில் படங்களை போடுவதில் கவனம் செலுத்தவும் இல்லையெனில் கீழே குறிப்பிட்ட பெண்ணின் நிலைமைதான் உங்களிற்கும் ,புகைப்படங்களை போடுவதால் உங்கள் புகைப்படங்களை களவாடி ஒரு கணக்கை உருவாக்கி தாமே இந்த புகைப்படத்தில் உள்ளவர்
என்பதை உறுதி படுத்தலாம் .இவ்வாறு பலர் ஒரு புகைப்படத்தை பயன்படுத்தி உள்ளமை இப்போது கண்டறியப்பட்டுள்ளது .இப்போது இந்த பெண்ணின் நிலைமை அறிய இந்த செய்தியை படியுங்கள்.இது ஏளனம் செய்வதற்காக சொல்லவில்லை இணையமொன்றில் வெளியிட்ட செய்தியினை இங்கு பிரசுரிக்கின்றோம் :
சுமார் 35 முதல் 38 பயணாளர் கணக்கை பேஃஸ் புக்கில் திறந்து வைத்திருக்கும் தமிழ் பெண் தொடர்பாக விழிப்புடன் இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. புகைப்படத்தில் உள்ள பெண் தான் இக் கணக்குகளைத் திறந்தாரா, இல்லை இப் பெண்ணின் புகைப்படங்களைப் பாவித்து வேறுயாராவது இக் காரியங்களைச் செய்கிறார்களா என்பது இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. சமீபகாலமாக இலங்கை மற்றும் பிற நாடுகளில் உள்ள பெண்கள் மேற்குலகில் உள்ள தமிழ் இளைஞர்களை பேஃஸ் புக் மூலம் தொடர்புகொள்வதும், பின்னர் சட்டிங் ஊடாகக் காதலிப்பதும் வழமையாகிவிட்டது. பின்னர் பணம் தேவை என்று சொல்லி பணத்தைக் கறந்துவிட்டு ஏமாற்றுவதும் வாடிக்கையாகிவிட்டது.
இந் நிலையில் அங்கீதா, பிரியா, தீபா, பூஜா, ஊர்மிளா எனப் பல பெயர்களில் இவர் பேஃஸ் புக் கணக்கை திறந்துவைத்திருக்கிறார். ரெட்டி, பட்டேல், ஷா, மற்றும் சிங்களப் பெயர்களையும் கூட இவர் விட்டுவைக்கவில்லை. இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களையும் மற்றும் இலங்கையையும் குறிவைத்து இப் பெண் பெரும் திட்டம் தீட்டியிருப்பாரோ தெரியாது. நீங்கள் பேஃஸ் புக் பாவனையாளராக இருப்பின் இனியாவது உஷாராக இருப்பீர்கள் என நாம் நம்புகிறோம் !
0 கருத்து:
கருத்துரையிடுக