புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

சுதந்திர அல்ஜீரிய நாட்டின் முதல் ஜனாதிபதி அகமது பென் பெல்லா(வயது 95) கடந்த 11ம் திகதி காலமானார். பிரான்சின் வசம் இருந்த அல்ஜீரியா கடந்த 1962ம் ஆண்டில் சுதந்திரம் பெற்றது. அதனைத் தொடர்ந்து 1963ம் ஆண்டில் அல்ஜீரியாவின் முதல் ஜனாதிபதியாக பென் பெல்லா பதவியேற்றார்.மக்கள்
ஆதரவைப் பெற்ற தலைவராக இருந்தாலும், 1965ம் ஆண்டில் நடந்த இராணுவப் புரட்சியைத் தொடர்ந்து அவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். பின்னர் 15 ஆண்டுகள் அவர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார். 1980ம் ஆண்டில் அவர் விடுதலை செய்யபட்டபின் நேரடி அரசியலில் ஈடுபடாமல் இருந்தார்.

முறையான பள்ளிக் கல்வி பெறாத பென் பெல்லா தமது 15-ம் வயதில் அரசியலில் ஈடுபட்டார். சிறையில் இருக்கும் போது அரபி எழுத, படிக்கக் கற்றார். தன் வாழ்நாளில் 24 ஆண்டுகளை சிறையில் கழித்தார். இரண்டாம் உலகப் போரில் பிரான்ஸ் இராணுவத்தில் சேர்ந்து போரிட்டு வீரப்பதக்கம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top