குறிப்பு -எமது இணையத்தில் இந்த பகுதியை வெளியிடுவது எமது நோக்கமல்ல ,மேலும் இணையத்தில் வெளிவரும் ஊர்சார்ந்த எந்தவொரு விடங்களும் பக்கசார்பாக வெளியிடப்படமாட்டாது ,கீழ்குறிப்பிட்ட விடங்களும் அவ்வாறே முடிந்தவரை நடுநிலைமையாக
நின்று எமது இணையம் செயற்படும் .இனிவரும் காலங்களில் ஊரை இரண்டு படுத்தும் ஆக்கங்கள் ஏற்று கொள்ளப்பட மாட்டாது.என்பதை மன வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறோம்.நன்றி சாந்தை இணையம்
பணிப்புலம் சனசமூகநிலைய நிர்மாண ஆரம்பத்தின் அன்று ஆலயத்தை இன்று நடத்துபவர்கள் ஆரம்பவேலையை ஆரம்பிக்க தடை போட்டனர். அவர்கள் வாசிகசாலை நிர்வாகம் தங்களுக்கு வாடகை கட்டும்படி வற்ப்புறுத்தியபோதும் பொதுமக்களும் நிர்வாகமும் மறுத்தனர்.பல கட்ட பேச்சுவார்த்தைகளின் பின்னர் 500 ரூபா ஆலயத்துக்கு திருவிழாவுக்கு அன்பளிப்பு தருவதாய் ஒப்பந்தமானது.
இதன்படி கடிதம் வழங்கப்பட்டது. இதன் பின்னரே வேலைகள் ஆரம்பமாகியது.வேலைகளை தொடங்கி தொடர இருக்கும் நிலையில் மீண்டும் ஒரு தடைகளைப்போட ஆலயத்தின் தற்போதைய உரிமையாளர்கள் என கூறுபவர்கள் பிரதேச சபைக்கு ஒரு சமாதான நீதவானின் உதவியுடன் சென்று தங்கள் கோயில் வளவுக்குள் வாசிகசாலை கட்டுவதாயும் நிலம் அபகரிப்பதாயும் ஒரு புகார் அளித்துள்ளனர் இதற்க்கு பிரதேச சபையினர் புன்னகையுடன் உங்கள் வளவில் வாசிகசாலை கட்ட எமது அரசாங்கம் 65 வருடங்களாய் மானியம்வளங்காது.ஒரு பொதுநிலத்தில் தான் வாசிகசாலைகட்டமுடியும் என கூறி திருப்பி அனுப்பினர்.இருந்தும் வாசிகசாலை நிர்வாகத்தினர் தமது பக்க நியாயங்களை கூறி ஒரு கடிதமும் பிரதேச சபைக்கு கையளித்துள்ளனர்.ஆலயத்தினர் தங்களிடம் உறுதிகள் இருப்பதாய் அதை வழங்கியுள்ளனர்.ஆனாலும் ஊரில் இது ஒரு பெரும் பிரச்னையாய் வெடித்துள்ளது,தற்போது பல ஊரின் இளைஞர்களின் வேண்டுகோளின்படி வாசிகசாலையின் உரிமைக்காய் ஒரு மாபெரும் மக்கள் அணிதிரண்டுள்ளது :மட்டுமல்ல ஆலயத்தின் சகல உரிமைகளையும் மீண்டும்பெற வெளிநாட்டிலும் உள்நாட்டு மக்கள் அனைவரும் திரண்டு ஆலயத்தின் உரிமையை மக்களிடம் திரும்பினால்தான் வாசிகசாலை கட்டமுடியும் என்றால் சகல சட்ட நடவடிக்கைகளையும் தொடர ஆயத்தம் செய்துள்ளோம். ஏற்க்கனவே பல விதமான சாத்வீகமுறையில் அணுகியும் ஓம் ஓம் என கூறியவர்கள் இன்று ஒரு சமாதான நீதவானை நம்பி இவர்கள் வாசிகசாலையும் கையகப்படுத்தமுடியுமானால் மக்கள் பலம் பணபலமும் பலமடங்கில் உள்ள நாங்கள் யாரென நீரூபிக்க அம்மாள் பணிப்புலம் மக்களுக்கு தந்த இறுதிச்சந்தர்ப்பம் ஆகவே எனியும் மௌனங்களை கலைத்து வாசிகசாலைகட்ட உள்ளதடைகளை விரட்ட ஆலயத்தின் ஆக்கிரப்பாளர்கள் தான் தடை எனவே இவர்களின் ஆக்கிரமிப்புதான் தடை எனவே தடைகளை களைவதே முக்கியவேலை அணிதிரள்வோம்.
0 கருத்து:
கருத்துரையிடுக