புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

இன்றைய நவீன சமூகத்தை பாதிக்கும் பிரச்சினைகளில் உடல் பருமன் பிரச்சினை மிகப்பெரிதாக உருவெடுத்துள்ளது. அதிலும் குறிப்பாக, குழந்தை பருவத்திலேயே ஏற்படும் உடல் பருமன் சமீப காலமாக அதிகரித்து வருகிறது.உடல் பருமன் பிரச்சினை இறப்பு ஏற்படும் அளவிற்கு தீவிரமானது. உணவுப் பழக்கவழக்கம், சோம்பேறித்தனம் ஆகியவை உடல் பருமன் நோய்க்கு முக்கிய காரணிகளாக இருக்கின்றன.
 
இந்நிலையில் உடல் பருமனை ஏற்படுத்தக்கூடிய மரபணுவை ஓர் ஆய்வின் மூலம் கண்டுபிடித்துள்ளனர். உடல் பருமனிற்கான மரபணுவை கண்டறிய உலக அளவில் ஆய்வுகள் நடைபெற்று வந்தன.இந்த அமைப்பிற்கு அமெரிக்க தேசிய சுகாதார நிறுவனம் ஒரு பகுதி நிதியை ஒதுக்கியிருந்தது.
 
முன்னதாக ஐரோப்பிய நாடுகள், ஆஸ்திரேலியா மற்றும் வட அமெரிக்க நிறுவனங்கள் நிதி உதவியளித்தன என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக நடைபெற்ற 14 ஆய்வுகளின் அடிப்படையில் சுமார் 5,530 குழந்தைகளிடம் உடல் பருமனைக் ஏற்படுத்தும் மரபணுவைக் கண்டறியும் ஆய்வு நடத்தப்பட்டது.
 
இந்த ஆய்வின் முடிவில் குழந்தைகளின் உடல் பருமனுக்கு காரணமான மரபணுக்களை கண்டறிந்தனர். குரோமோசோம் 13-ல், ஓ.எல்.எப்.எம். 4 எனும் ஒரு மரபணுவையும், குரோமோசோம் 17-ல் எச்.ஓ.எக்ஸ்.பீ 5 எனும் மற்றொரு மரபணுவையும் கண்டறிந்துள்ளனர்.
 
இக்கண்டுபிடிப்பு உடல் பருமன் நோயை குணப்படுத்துவதற்கு ஓர் வரப்பிரசாதமாக இருக்கும் என பிலடெல்பியா குழந்தைகள் மருத்துவமனையில் உள்ள சென்டர் பார் அப்ளைடு, ஜினோம்களின் இணை இயக்குனர் ஆஸ்ட்ரான் கிராண்ட் தெரிவித்தார்.
 
இந்நோயை கட்டுப்படுத்தவும் சிகிச்சையளிக்கவும். இந்த கண்டுபிடிப்பு மிக உதவியாக இருக்குமெனவும், இதை நடைமுறைக்கு கொண்டு வர மேலும் பல ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top