பொதுவாக வீடு மற்றும் அலுவலக கட்டிடங்களை செங்கல், சிமெண்ட், மணல் கொண்டு கட்டுவது தான் வழக்கமாக இருந்து வருகிறது. சில இடங்களில் மரத்தை கொண்டு அமைப்பதுண்டு.இதே நேரத்தில் அயர்லாந்து நாட்டில் டூப்ளின் நகரை சேர்ந்த பிராங் புக்லீய் என்பவர் கிழிந்த பணம் நோட்டுகளை
கொண்டே வீடு ஒன்றை கட்டி இருக்கிறார். செங்கல்களுக்கு பதில் பணம் நோட்டு கத்தைகளை அடுக்கி இந்த வீடு அமைந்திருக்கிறது.
இதற்காக அவருக்கு அந்த நாட்டின் மத்திய வங்கி ரூ.8 ஆயிரத்து 200 கோடி மதிப்புள்ள (1.4 பில்லியன் யூரோ) கிழிந்த நோட்டுகளை வழங்கியுள்ளது. மேலும் கதவு, ஜன்னல் அமைப்பதற்கான மரங்களை நண்பர்கள் சிலர் நன்கொடையாக கொடுத்து உதவி இருக்கிறார்கள்.இந்த உதவிக்கரத்தால் பிராங் தனது 3 அறைகளைக் கொண்ட இல்லத்தை வெறும் ரூ.2,100 செலவிலேயே வெற்றிகரமாக கட்டி முடித்துவிட்டார். ஓவியரான அவர் இந்த வீட்டை நேரில் வந்து பார்த்து ரசியுங்கள் என சுற்றுலா பயணிகளுக்கு அழைப்பு விடுக்கிறார்.
0 கருத்து:
கருத்துரையிடுக