சித்திரைப் புத்தாண்டானா இன்றைய தினம் மோட்டார் சைக்கிளில் ஆலயத்தை தரிசிக்கச் சென்ற குடும்பஸ்தர் ஒருவர் விபத்தில் சிக்கி பலியாகியுள்ளார்.வவுனியா – செட்டிகுளத்தில் இன்று காலை 7 மணியளவில் இடம்பெற்ற இந்த விபத்தில் இரண்டு பிள்ளைகளின் தந்தையாரான உதயகுமார் விஜயகாந்த் (வயது 30) என்பவரே பலியாகியுள்ளார்.
இவர் பயணித்த மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து வீதிக்கு அருகில் உள்ள பனை மரம் ஒன்றுடன் மோதியுள்ளது. இதன்போது மோட்டார் சைக்கிளை செலுத்தி வந்த குடும்பஸ்தரான உதயகுமார் விஜயகாந்த் அந்த இடத்திலேயே மரணமடைந்துள்ளார்.
0 கருத்து:
கருத்துரையிடுக