தெற்கு அதிவேக வீதியில் இதுவரை பெற்றுக்கொள்ளப்பட்ட அதிகூடிய வருமானம் கடந்த 15ஆம் திகதி பதிவானதாக துறைமுக மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.குறித்த தினம் 5.2 மில்லியன் ரூபா வருமானம் ஈட்டப்பட்டதாக அமைச்சின் செயலாளர் ரஞ்சித் பிரேமசிறி தெரிவித்துள்ளார்.இந்தத் தொகை தெற்கு அதிவேக வீதி திறந்துவைக்கப்பட்டதன் பின்னர் ஈட்டப்பட்ட அதிகூடிய வருமானமாக கருதப்படுகின்றது.
கடந்த 15ஆம் திகதி தெற்கு அதிவேக வீதியில் 18,290 வாகனங்கள் பயணித்துள்ளதாக அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.
தெற்கு அதிவேக வீதி மக்கள் பாவனைக்கு திறந்துவிடப்பட்டது முதல் இதுவரை 380 மில்லியன் ரூபா வருமானமாக பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 கருத்து:
கருத்துரையிடுக