கர்ப்பிணிகள் போன்று பாசாங்கு செய்து கொக்கெயின் போதைப் பொருளினை இலங்கைக்கு கடத்தி வந்த இரு தாய்லாந்து நாட்டு யுவதிகளை கைது செய்துள்ள கட்டுநாயக்க விமான நிலைய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு பொலிஸார் அந்த யுவதிகளிடமிருந்து 2 கோடி ரூபாய் பெறுமதியான
போதைப்பொருட்களினை மீட்டுள்ளனர்.
போதைப்பொருட்களினை மீட்டுள்ளனர்.
குறித்த யுவதிகளிருவரும் 162 கொக்கெயின் போதைப்பொருள் வில்லைகளை விழுங்கியே கடத்தி வந்துள்ளனர். இவர்களை சந்தேகத்தின் பேரில் கைது செய்த போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதித்து வைத்தியர்களின் உதவியுடன் மிகவும் பாதுகாப்பாக அந்த போதைப்பொருள் வில்லைகளை வெளியில் எடுத்துள்ளனர்.
ஒரு யுவதியின் வயிற்றில் 88 கொக்கெயின் வில்லைகளும் மற்றைய பெண்ணிடம் 74 கொக்கெயின் வில்லைகளும் இருந்ததாக பொலிஸார் அறிவிக்கின்றனர்.
0 கருத்து:
கருத்துரையிடுக