யாழ்ப்பாணம் – செம்மணி வீதியில் அமைந்துள்ள வயற்பிரதேசத்தில் நேற்றைய தினம் முதலையொன்று அப்பகுதி மக்களால் பிடிக்கப்பட்டுள்ளது.சுமார் நான்கரை அடி நீளமான இந்த முதலை பிரதேசத்திலுள்ள கால்வாய் ஒன்றின் ஊடாக விவசாய நிலத்தில் பிரவேசித்த போது பிடிக்கப்பட்டுள்ளது.பிரதேச மக்கள் முதலையைப் பிடித்து மற்றுமொரு இடத்தில் கட்டி வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இதுவரை முதலை எவரிடமும் கையளிக்கப்படவில்லை என எமது பிராந்திய செய்தியாளர் குறிப்பிட்டார்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 கருத்து:
கருத்துரையிடுக