தென்மராட்சி, மீசாலை மற்றும் மந்துவில் பகுதிகளைச் சேர்ந்த இளைஞர்களுக்கிடையே கடந்த சில தினங்களாக கோஷ்டி மோதல்கள் இடம்பெற்று வருகின்ற போதிலும் இதனைத் தீர்ப்பதற்கு உரிய தரப்புகள் முன்வரவில்லையென்று பிரதேச மக்கள்
குற்றஞ்சாட்டியுள்ளனர்.இந்தப் பகுதியைச் சேர்ந்த இளம் யுவதி ஒருவரை மற்றைய பகுதி இளைஞர்கள் சிலர் நக்கலடித்ததைத் தொடர்ந்தே இந்தப் பிரச்சினை கோஷ்டி மோதலாக மாறியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
குற்றஞ்சாட்டியுள்ளனர்.இந்தப் பகுதியைச் சேர்ந்த இளம் யுவதி ஒருவரை மற்றைய பகுதி இளைஞர்கள் சிலர் நக்கலடித்ததைத் தொடர்ந்தே இந்தப் பிரச்சினை கோஷ்டி மோதலாக மாறியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இரு குழுக்களும் மீசாலைச் சந்தி மற்றும் மாவடிப் பிள்ளையார் ஆலயம் என்பவற்றுக்குச் சமீபமாக இரண்டு தடவைகள் மோதலில் ஈடுபட்டுள்ளதாகவும் இதில் சில இளைஞர்கள் காயமடைந்துள்ளதாகவும் தெரியவருகின்றது.
நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3 மணியளவில் இரு குழுக்களுக்கும் இடையே நடைபெற்ற மோதலில் இளைஞர் ஒருவர் காயமடைந்துள்ளார்.
இவ்வாறு தொடர்ந்து மோதல்கள் நடைபெற்று வருகின்ற போதிலும் சாவகச்சேரிப் பொலிஸார் இதில் உரிய அக்கறை எடுக்கவில்லையென்று பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
இவ்வாறான சம்பவங்கள் தொடர்பில் முறைப்பாடுகள் செய்தால் கூட பொலிஸார் பக்கச்சார்புடனேயே செயற்படுவதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.
பிரதேச மட்டங்களில் நடைபெறுகின்ற இவ்வாறான குற்றச் செயல்கள் தொடர்பாக பொலிஸார் உரிய அக்கறை எடுக்காத காரணத்தாலேயே குற்றங்கள் அதிகரிப்பதாகவும் பொது மக்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.
0 கருத்து:
கருத்துரையிடுக