புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

கோவையை அடுத்த கோணவாய்க்கால் பாளையம் மதுரைவீரன் கோவில் வீதியை சேர்ந்தவர் சரவணன். இவர் மாநகராட்சியில் குப்பை லாரி டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி சந்தியா (வயது 45). இவர்களுக்கு கீதாஞ்சலி (வயது 18), பிரவீணா (வயது 13) என்ற இரு மகள்களும், பிர
காஷ் (வயது 15) என்ற ஒரு மகனும் உள்ளனர்.

சரவணன் தனது மனைவியிடம் குடும்ப செலவுக்கு சரியாக பணம் கொடுப்பதில்லை. மேலும் சரவணனின் பெற்றோரும் சேர்ந்துகொண்டு சந்தியாவையும் அவரது குழந்தைகளையும் அவதூறாக பேசியுள்ளனர்.

இதனால், மன வேதனை அடைந்த சந்தியா தனது மகள்கள் மற்றும் மகனுடன் தீக்குளித்து தற்கொலை செய்ய முடிவு செய்தார். அதன்படி சத்யா சம்பவத்தன்று தனது மகள்கள் மற்றும் மகனுடன் வீட்டுக்கதவை உள்பக்கமாக பூட்டிக்கொண்டார்.

பின்னர் உடலில் மண்எண்ணையை ஊற்றியதோடு வீடு முழுவதும் மண்எண்ணையை ஊற்றி தீ வைக்க முயன்றார். அதிர்ச்சியடைந்த கீதாஞ்சலி செல்போன் மூலம் தனது சித்தி மனோகரியிடம் இதுகுறித்து தகவல் கூறியுள்ளார்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top