புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


நீண்ட மாதங்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த மனோரமா, தற்போது குணமடைந்து விட்டதால் மீண்டும் நடிக்க வந்துள்ளார்.இயக்குனர் ஹரியின் சிங்கம்-2 விரைவில் தயாராக உள்ளது.சூர்யா நாயகனாகவும் ஹன்சிகா நாயகியாகவும் நடிக்க குணசித்திர
வேடங்களில் நடிக்கும் நடிகர்களின் தெரிவும் முடிந்து விட்டது.

இதில் முக்கியமாக மனோரமா ஒப்பந்தமாகியுள்ளார். நீண்ட மாதங்களாக சர்க்கரை, இரத்த அழுத்தம், சிறுநீரக கோளாறு என பல்வேறு நோய்களால் அவதிப்பட்டார் மனோரமா.

இதையடுத்து கோயிலுக்கு சென்ற இடத்தில் வலுக்கி விழுந்து தலையில் பலத்த அடிப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

செயற்கை சுவாசம் வைக்கும் அளவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது அனைத்து நோய்களிலிருந்தும் மீண்டு வந்துள்ள மனோரமா மீண்டும் நடிக்க வந்துள்ளார்.

இயக்குனர் ஹரி, சிங்கம்-2 நடிக்கிறீர்களா? என்று கேட்டதற்கு உடனே சம்மதம் ஆச்சி மனோரமா தெரிவித்துள்ளார்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top