புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


கண்டியிலிருந்து பதுளை நோக்கி இன்று மதியம் பயணித்த சரக்கு புகையிரதம் ஒன்றில் மோதுண்டு 16 மற்றும் 17 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவரும், யுவதியொருவரும் உயிரிழந்துள்ளனர்.


இன்று மதியம் ஹப்புத்தளை மற்றும் தியதலாவை பிரதேசத்திற்கு இடையிலான புகையிரதப் பாதையிலேயே இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது. அவர்கள் புகையிரதத்தின் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சம்பவத்தில் மரணமான இளைஞர் மற்றும் யுவதியின் சடலங்கள் தியதலவை ஆதார மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

மரணமானவர்களின் சடலங்கள் குறித்த சட்டமருத்துவ அதிகாரியின் விசாரணைகள் இன்று அல்லது நாளை இடம்பெறும் என தியதலாவை ஆதார மருத்துவமனையின் சட்டமருத்துவ அதிகாரி
பாலித்த பண்டார சுபசிங்க தெரிவித்துள்ளார்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top