புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

நாவலப்பிட்டி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கடியன்லேன நீர்வீழ்ச்சிக்கு அருகில் 19 வயது யுவதி ஒருவரின் சடலத்தினை பொது மக்கள் கண்ணுற்று நாவலப்பிட்டி பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர். நாவலப்பிட்டி பொலிஸார் சம்பவம் இடம் பெற்ற
இடத்திற்கு வருகைத் தந்து விசாரணைகளை நடத்திய போது போஹில் மேற்பிரிவு தோட்டத்தைச்
சேர்ந்த ஜெபமாலை லூட்ஸ் ரொட்ரிகோ என்ற யுவதியே இவ்வாறு சடலமாக இனங்காணப்பட்டுள்ளார். குறிப்பிட்ட யுவதி 25 ஆம் திகதி நாவலப்பிட்டி நகரிலுள்ள தனியார் கணினி பயிற்சி நிலையத்துக்குச் சென்றவர் எனவும் இரவாகியும் வீடு திரும்பவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து யுவதியின் பெற்றோர் நாவலப்பிட்டி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். இந்த நிலையில் நாவலப்பிட்டி பத்தனை பிரதான பாதையில் கடியன்லேன நீர்வீழ்ச்சிக்கு அருகிலுள்ள பாலத்துக்கு அடியில் யுவதி இன்று 27 ஆம் திகதி சடலமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். யுவதியின் சடலம் காணப்பட்ட இடத்தில் யுவதியின் மேலும் சில உடைகள் இருந்த பொதியொன்றும் கண்டெடுக்கப்பட்டுள்ளது. நீதிவானின் விசாரணைகளைத் தொடர்ந்து யுவதியின் சடலம் சட்ட வைத்திய அதிகாரியின் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுமென நாவலப்பிட்டி பொலிஸ் நிலையத்தின் சார்ஜன்ட் விஜயசிங்ஹ தெரிவித்தார்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top