புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

ஓமன் நாட்டில், பில்லி, சூனியம் போன்றவற்றை செய்து மக்களை ஏமாற்றியதாக, இந்தியர்கள் 24 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஓமன் நாட்டில் தங்கியிருந்து அங்குள்ளவர்களிடம் ராசி கற்கள் விற்பது, பில்லி, சூனியம் வைப்பது உள்ளிட்ட வேலைகளை சில இந்தியர்கள் செய்து வந்தனர்.

இவர்களிடம் ராசி கல் மற்றும் சில மந்திர பொருட்களை வாங்கிய நபர், அதனால் எந்த பலனும் ஏற்படவில்லை என்பதை உணர்ந்து, இதே போல் ஏமாந்த மற்ற நண்பருடன் சேர்ந்து, போலீசில் புகார் செய்தார்.

மாந்திரீகம் செய்து வந்த வீட்டை போலீசார் அதிரடி சோதனை நடத்தி, மண்டை ஓடு, எலும்புத் துண்டு, மந்திர கல், சங்கிலி போன்றவற்றை கைப்பற்றினர்.

இது தொடர்பாக, 13 பெண்கள் உட்பட, 24 இந்தியர்கள் கைது செய்யப்பட்டனர். இவர்களிடமிருந்து, 3.5 லட்ச ரூபாய் கைப்பற்றப்பட்டது.

இந்த கும்பல், சிங்கப்பூர், கத்தார், சீனா உள்ளிட்ட நாடுகளிலும் இது போன்ற வேலைகளை செய்தது, விசாரணையில் தெரிய வந்துள்ளது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top