பல பெண்களுடன் தொடர்பு வைத்திருந்ததை கண்டித்ததால், மனைவியை உயிரோடு எரித்துக் கொன்றார் கணவனை போலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர்.தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம் அருகே 2,ம் புலிகாடு கிராமத்தை சேர்ந்தவர் சீனிவாசன் (50). வெளிநாட்டில் வேலை செய்து
வந்தார்.
பின்னர் சொந்த ஊருக்கு வந்து விவசாயம் செய்து வருகிறார். மனைவி ருக்மணி (45). இவர்களது மகள் விஜயபாரதி (22), பட்டதாரி. மகன் மணிகண்டன், ஓமன் நாட்டில் இன்ஜினியராக உள்ளார்.
சீனிவாசனுக்கு பல பெண்களுடன் தொடர்பு இருந்தது. இதனால் ஊதாரித்தனமாக செலவு செய்து வந்தார். மகன் அனுப்பும் பணத்தையும் பெண்களுக்கு செலவு செய்துவந்தார். இதை தட்டிக் கேட்டதால் கணவன், மனைவி இடையே தகராறு இருந்துவந்தது.
இந்நிலையில் வயலை விற்கவும் சீனிவாசன் முயன்றார். இதற்கு ருக்மணி கடும் எதிர்ப்பு தெரிவித்தார். நேற்று இரவும் இது தொடர்பாக தம்பதிக்குள் மோதல் ஏற்பட்டது.
பின்னர் இருவரும் தூங்கிவிட்டனர். நள்ளிரவு ஒரு மணிக்கு கண்விழித்த சீனிவாசன், தூங்கிக் கொண்டிருந்த ருக்மணி மீது மண்ணெண்ணெயை ஊற்றி தீவைத்தார்.
அவர் அலறி துடித்ததார். சத்தம் கேட்டு எழுந்த விஜயபாரதி, போர்வையை போர்த்தி தீயை அணைக்க முயன்றார். இதில் அவர் மீதும் தீப்பற்றியது.
அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து தீயை அணைத்தனர். அதற்குள் ருக்மணி உடல் கருகி அந்த இடத்திலேயே இறந்தார். படுகாயமடைந்த விஜயபாரதியை பேராவூரணி ஆஸ்பத்திரியில் சேர்த்துள்ளனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக சேதுபாவாசத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து, சீனிவாசனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
போலீசாரிடம் விஜயபாரதி அளித்த வாக்குமூலத்தில், ‘‘என் அப்பாவுக்கு பல பெண்களுடன் தொடர்பு இருந்து வந்தது. இதை அம்மா கண்டித்தார்.
இதனால் குடும்பத்தில் தகராறு ஏற்பட்டது. வயலை விற்க அப்பா ஏற்பாடு செய்தார். இது தொடர்பாக நேற்றிரவு வீட்டில் சண்டை ஏற்பட்டது. நள்ளிரவில் அம்மா மீது அப்பா கெரசின் ஊற்றி தீவைத்து விட்டார்’’ என்று கூறியுள்ளார்.

0 கருத்து:
கருத்துரையிடுக