காதலியின் தாக்குதலிருந்து தப்பித்துக்
கொள்வதற்காக 8 ஆவது மாடியிலுள்ள வீட்டின் குப்பைத் தொட்டிக்குள் மறைந்து கொள்ள முயன்ற காதலன் குப்பை அகற்றும் குழாய் வழியாக விழுந்து 3ஆவது மாடியிலுள்ள குப்பைத்தொட்டிக்குள் மாட்டிக்கொண்ட சம்பவம்
ரஷ்யாவில் இடம்பெற்றுள்ளது.

இருவருக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதத்தையடுத்து தனது காதலி தன்னை தாக்குவாரென்று பயந்த 32 வயதான மேற்படி நபர் ஓடிச்சென்று தான் குடியிருக்கும் வீட்டின் குப்பை தொட்டிக்குள் மறைந்துக்கொண்டுள்ளார்.
எனினும் அவர் குப்பை அகற்றும் குழாய் வழியாக விழுந்து 3 ஆவது மாடியுள்ள பகுதியில் அந்தரத்தில் சிக்கினார்.பின்னர் தீயணைப்புப் படையினரின் உதவியுடன் அவர் கீழிறக்கப்பட்டார்.மேற்படி நபரின் பெயருக்கு களங்கம் ஏற்படுமென்பதற்காக குறித்த நபரின் பெயரை வெளியிட பொலிஸார் மறுத்துவிட்டனர்.
0 கருத்து:
கருத்துரையிடுக