புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

இத்தாலி நாட்டில் வேலைவாய்ப்பு பெற்றுத்தருவதாகக் கூறி ஒருவரிடம் 15 இலட்சம் ரூபா பணத்தைப் பெற்று ஏமாற்றிய சந்தேகநபர் ஒருவரை யாழ். விசேட குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் இன்று வெள்ளிக்கிழமை கைது
செய்துள்ளனர். 

யாழ்.சுன்னாகப்பகுதியைச் சேந்த குறித்த நபர் தலைமறைவாயிருந்த நிலையில் சுன்னாக சந்தையில் வைத்து கைது செய்யப்பட்டு இன்றைய தினம் யாழ். நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

குறித்த சந்தேக நபரை 10,000 காசுப் பிணையிலும் 100,000 இரண்டு ஆட்பிணையலும் விடுதலை செய்ததுடன் பிரதி வெள்ளிக்கிழமைககளில் யாழ்.நீதிமன்றப் பதிவாளர் முன்னிலையில் ஒப்பமிடுமாறு உத்தரவிட்டதுடன் இது தொடர்பான வழக்கு எதிர்வரும் 25ஆம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளார்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top