புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

பாடசாலையில் விழுந்த மாணவி ஒருவர் வைத்தியசாலயில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்த சம்பவமொன்று அக்கரப்பத்தனை பிரதேசத்தில் இடம் பெற்றுள்ளது.இந்தச்சம்வம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது :

அக்கரப்பத்தனை டொரிங்டன் தமிழ் பாடசாலையில் தரம் மூன்றில் கல்விக்கற்று வந்த அயோனா தோட்டத்தைச் சேர்ந்த எட்டு வயதான சிவக்குமார் சியாளனி என்ற மாணவி கடந்த 15ஆம் திகதி வழமைப்போல பாடசாலைக்கு சென்றுள்ளார்.

பாடசாலையில் விளையாடிக் கொண்டிருந்த மாணவி திடீரென கீழே விழுந்ததாகவும் அதன் பின்பு இந்த மாணவியைப் பாடசாலையின் நிருவாகத்தினர் வைத்தியசாலையில் அனுமதித்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு அனுமதிக்கப்பட்ட மாணவி 16ஆம் திகதி சிகிச்சைப்பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து குறித்த மாணவியின் சடலம் பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டு பிரேத பரிசோதனைக்குப்பின்பு குறித்த சிறுமியின் சடலம் நேற்று 17ஆம் திகதி பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இந்த மரணம் தொடர்பாக அக்கரப்பத்தனைப் பொலிஸார் பல்வேறு தரப்பிடம் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top