புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

வயிற்று வலி என மருத்துவமனைக்கு வந்த 58 வயது பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. விழுப்புரம் மாவட்டம், செஞ்சியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு 58 வயது பெண் ஒருவர் 65 வயது கணவருடன் திங்கள் காலை 9 மணியளவில் வந்தார். தனக்கு வயிறு வலிப்பதாக
கூறிய பெண்ணுக்கு டாக்டர் வரும் வரை காத்திருந்தார்.

இதற்கிடையே கழிவறைக்குச் சென்ற பெண் திடீரென ஆண் குழந்தை பிறந்தது. மருத்துவமனை ஊழியர்கள், அதிர்ச்சியடைந்து, பெண்ணிடம் விசாரித்த போது தான் கர்ப்பமாக இருந்ததே தெரியாது என்றும் வயிற்று வலிக்கு, சிகிச்சைக்கு வந்ததாகவும் கூறினார். பெண்ணுக்கு குழந்தை பிறந்ததைக் கேட்டு அவரது கணவர் ஆட்டோ அழைத்து வரச் சென்றுவிட்டார். குழந்தை பிறந்த தகவல்  தெரியவே ஆட்டோ சாரதி ஒருவர் குழந்தையை  தன்னிடம் தத்துக் கொடுக்குமாறு கேட்டுள்ளார். அதற்குள் ஆட்டோவை அழைத்து வந்த முதியவர் பெண்ணை அவசரமாக அழைத்துச் சென்று விட்டார். அவர்கள் யார் எந்த ஊரைச் சேர்ந்தவர்கள் என்ற விபரத்தை யாரிடமும் தெரிவிக்கவில்லை. இச்சம்பவம் செஞ்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top