புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


அமெரிக்காவில் உலகின் மிகப்பெரிய நீர் வீழ்ச்சியான நயாகரா உள்ளது. இதன் உச்சியிலிருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றவர் பலத்த காயங்களுடன் உயிர் தப்பினார். நேற்று காலை 10.20 மணி அளவில் அடையாளம் தெரியாத
ஒருவர், நயாகரா வீழ்ச்சியின் 180 அடியிலிருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றார்.

அவர் கீழே விழுந்ததைப்பார்த்த சுற்றுலாப்பயணிகள் அவரை மீட்க மீட்புப்படையினருக்கு அழைப்பு விடுத்தனர். இதையடுத்து மீட்புபடையினர் உதவியுடன் அவரை மீட்டபோது உயிருடன் இருப்பது தெரிய வந்தது.

இருந்தும் அவருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டிருந்ததாக பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். தற்கொலைக்கு முயன்ற அந்த நபருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸ் அதிகாரி தெரிவித்தார்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top