ஐஸ்கிறீம் என நினைத்து புண்ணுக்கு போடும் சிகப்புநிற மருந்தை உட்கொண்ட மூன்று வயதுச் சிறுவன் ஒருவன் நேற்று திங்கட்கிழமை உயிரிழந்துள்ளான் என்று பருத்தித்துறைப் பொலிஸார் தெரிவித்தனர்.
யாழ். தொண்டமணாறு, கெருடாவில் மேற்கைச் சேந்த ராஜசேகரம் றொஷான் (வயது 3) என்ற சிறுவன் தாயார் கடைக்குச் சென்ற சமயம் மேசையில் இருந்த புண்ணுக்கு போடும் மருந்தை, ஐஸ்கிறீம் என எண்ணி உட்கொண்டுள்ளதாக பொலிஸ் விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து அச்சிறுவன் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்ட வழியிலேயே உயிரிழந்துள்ளான் என பொலிஸார் குறிப்பிட்டனர்.
சிறுவனது சடலம் மருத்துவப் பரிசோனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையின் சவச்சாலையில் வைக்கப்பட்டுள்ளது. இச்சிறுவனது மரணம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
0 கருத்து:
கருத்துரையிடுக