புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


இப்படியான சம்பவங்கள் எங்கே நடக்கும் என்பது சாதாரண வாசகர்களுக்கு கூடப் புரியும்.19 வயது மருமகனும், திருமணமான 35 வயது அத்தையும் காதல் வேகத்தில் சில நாட்களுக்கு முன் ஒன்றாக ஊரை விட்டு ஓடிய விபரீதம் இந்தியாவின் போபால்
நகரத்தில் இடம்பெற்று உள்ளது.

இந்நிலையில் இருவரது குடும்பத்தினரும் பலத்த சண்டையில் ஈடுபட்டு உள்ளார்கள். பாரதூரமான வன்முறை வெடித்து இருக்கின்றது. மாமியின் மீது மருமகனின் வீட்டாரும், மருமகன் மீது மாமியின் வீட்டாரும் பரஸ்பரம் குற்றம் சாட்டிக் கொண்டனர்.

உச்ச கட்டமாக பையனின் வீட்டைச் சேர்ந்த திருமணமான பெண் ஒருத்தியை ஓடிப் போன பெண்ணின் கணவன் பலவந்தமாக பிடித்துச் சென்று பணய கைதியாக வைத்து இருக்கின்றார்.

பையன் நகரத்தை அண்டிய டைமண்ட தொழில்சாலையில் வேலை பார்த்து வந்திருக்கின்றார். ஆனால் இவருக்கும், அத்தைக்கும் இடையில் மிக நீண்ட காலமாகவே தொடர்பு இருந்து வந்திருக்கின்றது.

இதை அயலவர்களும் அறிவார்கள். மனைவி ஓடிப் போய் விட்டார் என்பதை அறிந்த பெண்ணின் கணவன் ஊரவர்கள் மற்றும் உறவினர்கள் அடங்கலாக 700 பேரை திரட்டிக் கொண்டு ஆயுதங்களுடன் பையனின் வீட்டில் புகுந்து அட்டகாசம் செய்திருக்கின்றார்.

ஓடி போன பெண்ணை கண்டு பிடித்து கொடுக்க வேண்டியமை பையனின் குடும்பத்தின் பொறுப்பு என பஞ்சாயத்தில் தீர்ப்பளிக்கப்பட்டு உள்ளது. ஆனால் ஓடிப் போனவர்கள் இருக்கின்ற இடம் குறித்து எவ்வித சிறுதகவலும் தெரியாது என்கின்றனர் பையனின் குடும்பத்தினர். இரு குடும்பத்தினரும் பொலிஸில் தனித் தனி முறைப்பாடு மேற்கொண்டு உள்ளார்கள்.

இதனிடையில் பையனின் குடும்பத்தைச் சேர்ந்த திருமணமான பெண் ஒருத்தியை ஓடிப் போன பெண்ணின் கணவன் பலவந்தமாக பிடித்துச் சென்று உள்ளார். இது குறித்து பையனின் குடும்பத்தினர் கடத்தல் குற்றச்சாட்டு முறைப்பாட்டை பொலிஸில் மேற்கொண்டு உள்ளார்கள். பொலிஸார் நிலைமையை கட்டுப்பாட்டில் கொண்டு வர பகீரத முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

4 கருத்து:

 
Top